நோ எக்ஸாம்! ரயில்வேயில் வேலை.. அதுவும் சென்னையில்.. கல்வித்தகுதி என்ன? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தெற்கு ரயில்வேயில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள். இந்த வேலை வாய்ப்பு பற்றிய விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தெற்கு ரயில்வேயில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (JTA) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான கல்வி தகுதி, சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்

கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து சிவில் என்ஜினியரிங் பிரிவில் மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ படிப்பு அல்லது சிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18-வயது நிரம்பியவர்களும் 33 வயது பூர்த்தியாகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 09.10.2023 கடைசி நாள் ஆகும். பெண் விண்ணப்பதாரர்களுக்கும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கும் தேர்வு கட்டணம் எதுவும் கிடையாது.
சம்பளம் விவரம்: இந்த பணி முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒப்பந்த காலம் ரயில்வே நிர்வாகத்தின் முடிவுக்கு உட்பட்டது. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும். சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.
பிற விவரங்கள்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். எனினும் அரசு விடுமுறை நாட்களிலும் பணிக்கு அழைக்கப்படலாம். அப்படி அழைக்கப்படும் பட்சத்தில் அதற்கு ஈடாக மற்றொரு விடுமுறை வழங்கப்படும்.
தேர்வு குறித்த முழு விவரங்களையும் தேர்வு அறிவிப்பாணையும் தெரிந்து கொள்ள https://sr.indianrailways.gov.in/cris/uploads/files/1695562512731-JTA_Notification.pdf இந்த இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications