மத்திய அரசு ஊழியராக சூப்பர் சான்ஸ்! 10 ம் வகுப்பு தகுதி.. 1075 பணியிடங்கள்! எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு
சென்னை: ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி, மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக சுமார் 14 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப எஸ்எஸ்சி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய அரசு ஊழியராக பணியில் சேர வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால், மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ் எஸ் சி வெளியிடும் தேர்வு அறிவிப்புகளை எதிர்பார்த்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராகி வருகிறார்கள்.

மத்திய அரசு ஊழியராக இருந்தால் கைநிறைய சம்பளம், சலுகைக்ள் உள்ளிட்டவை கிடைக்கும் என்பதால் மத்திய அரசு பணியில் சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது. எஸ் எஸ் சி தற்பொது புதிய தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
பணியிடங்கள் விவரம்:
எம்.டி.எஸ், ஹவில்தார் (CBIC and CBN) என 1075 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது வரம்பு:
எம்.டி.எஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18-வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 02.08.2000 க்கு முன்பாகவோ, 01.08.2007 க்கு பிறகோ பிறந்தவராக இருக்கக் கூடாது. ஹவில்தார் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்கள் 02.08.1998 க்கு முன்பாகவோ 01.08.2007- க்கு பிறகோ பிறந்தவராக இருக்க கூடாது.
மத்திய அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் குறிபிட்ட பிரிவினருக்கு சலுகை அளிக்கப்படுகிறது. எஸ்.சி எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
சம்பளம்:
தற்போது உள்ள ஊதிய கமிஷன் படி லெவல் 1 நிலையில் உள்ள சம்பளம் கிடைக்கும். அதவது, ரூ.18 ஆயிரம் முதல் 56,900 வரை சம்பளமாக கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியில் தேர்வு நடைபெறும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோஅவி, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், கிருஷணகிரி ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்ப்டும்
விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 24 ஆம் தேதியாகும். தேர்வு நடைபெறும் மாதம் : செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 24 ஆம் தேதி வரை.
தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேர்வு அறிவிப்பினை படிக்கவும்: https://ssc.gov.in/home/apply
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications