வேலை தேடும் இளைஞர்களே ரெடியா? 'பிளஸ் டூ' போதும்.. ரூ.92 ஆயிரம் வரை சம்பளம்.. 3,712 பணியிடங்கள்
சென்னை: மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்பை வெளியிட்டு அவ்வப்போது அரசு விதிகளின்படி தேர்வு முறையை பின்பற்று பணியிடங்கள் நிரப்படுகின்றன.

அந்த வகையில், தற்போது அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,712 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. வயது வரம்பு என்ன கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) / ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டண்ட் (JSA)
டேடா எண்ட்ரி ஆபரேட்டர் (DEO)
டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் 'ஏ'
கல்வித்தகுதி:
நுகர்வோர் அமைச்சகம், உணவு & பொது விநியோகம் அமைச்சகம் மற்றும் கலாசார அமைக்கசத்தின் கீழ் உள்ள துறைகளில் டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் ஏ பணியிடங்கள் வருகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை கொண்ட பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
LDC/JSA and DEO/DEO ஆகிய பணியிடஙக்ளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 18 - 27 வயது உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 02-08-1997 முன்பு பிறந்தவர்களும் 01 -08 -2006 பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ,ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.
சம்பளம் எவ்வளவு?
லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) / ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டண்ட் (JSA) - ரூ.19,900 - 63,200 வரை
டேடா எண்ட்ரி ஆபரேட்டர் (DEO) ரூ. 25,500 - 81,100 மற்றும் Level-5 ரூ. 29,200 - 92,300
டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் 'ஏ'- லெவல் 4- ரூ.. 25,500 - 81,100 சம்பளமாக கிடைக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்னப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 08.04.2024. விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.05.2024 ஆகும். விண்ணப்ப படிவத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்: 10.05.2024 டூ 11.05.2024. தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி / எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை:
கணிணி வழியில் இரண்டு கட்டங்களாக (Tier-I), (Tier-II) தேர்வு நடைபெறும். அதன்பிறகு திறன் தேர்வு / டைப்பிங் டெஸ்ட் & சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும்.
தேர்வு மையங்கள்:
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு அறிவிப்பினை படிக்க https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice%20of%20CHSLE%202024_05_04_24.pdf இங்கே கிளிக் செய்யவும்
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications