Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவல்துறையில் வேலை வேண்டுமா? சப் இன்ஸ்பெக்டர் பணி.. 4000 பணியிடங்கள்! தேதி முடிய போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் டெல்லி காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவல் துறையில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே அவகாசம் உள்ளது.

எஸ்எஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் மத்திய அரசின் துறைகளில் உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் காவல்துறை பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை எஸ்.எஸ்.சியே மேற்கொள்கிறது.

SSC CPO 2024 Apply Online for 4187 Sub-Inspector posts till March 28

காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது அறிவிப்புகளை பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுத படையில் 4,187 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: டெல்லி காவல்துறையில் 186 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 125 ஆண் போலீஸ் மற்றும் 61 பெண் போலீஸ் என மொத்தம் 186 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய ஆயுதப்படை CAPFs-ல் 4001 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தமாக 4,187 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 02.08.1999 முன்பாக பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. அதாவது எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?: CAPFs -சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு மாதம் ரூ..35,400-.1,12,400/ வரை சம்பளமாக கிடைக்கும். டெல்லி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு ரூ.35,400 - 1,12,400-வரை சம்பளமாக கிடைக்கும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 28.03.2024 கடைசி நாளாகும்.

தேர்வு முறை: ஆன்லைன் வழி தேர்வு முறை, உடல்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். புதுவையிலும் நடைபெறுகிறது. கணிணி வழி தேர்வு மே 9, 10, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/final%20notice%20cpo%202024%2004.03.2024.pdf இங்கே கிளிக் செய்யவும். இன்னும் 4 நாள்களே விண்ணப்பிக்க அவகாசம் இருப்பதால் ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+