Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்எஸ்சி: மத்திய அரசில் மொழிபெயர்ப்பாளர் பணி.. மாதம் ரூ.1.42 லட்சம் சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு கல்வித்தகுதி என்ன, வயது வரம்பு என்ன என்பது பற்றிய விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஜூனியர் மொழி பெயர்ப்பாளர் (இந்தி), சீனியர் மொழி பெயர்ப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 301 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்

 SSC Recruitment; Junior Hindi Translator jobs, 301 vacancy, How to apply full details

பணி விவரங்கள்: ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அலுவலர் (Secretariat Official Language Service CSOLS), ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அலுவலர் (Armed Forces Headquaters), ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் (JHT), ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் (JT) பல்வேறு மத்திய அமைச்சகங்கள்/ அமைப்புகள்/ துறைகள், சீனியர் இந்தி மொழிபெயர்பாளர் (SHT)/ சீனியர் மொழிபெயர்ப்பாளர் என மொத்தம் 307 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி: இந்த பணியிடங்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் கல்லூரியில் இருந்து பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மொழிப் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்

தேர்வு நடைபெறும் இடங்கள்: இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். கணிணி முறையில் தேர்வு நடைபெறும். நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

சம்பள விவரம்: ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி பணியிடத்திற்கு ரூ.35,400 - ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி ரூ.35,400 - ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் - ரூ.35,400 - ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். சீனியர் இந்தி மொழிபெயர்பாளர் - ரூ.44,900 - 1,42,400 சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்க 01.08.2023 அன்று 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://ssc.nic.in - என்ற இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விதி விலக்கு உண்டு.. தேர்வு குறித்த முழு விவரங்களை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/FINAL_NOTICE_JHT_2023_22082023.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+