இந்திய கடற்படையில் வேலை.. பிளஸ் டூ முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்.. மாதம் ரூ. 69,100 வரை சம்பளம்!
சென்னை: இந்திய கடற்படையில் காலியாக உள்ள (Sailor in Medical Branch) எஸ்.எஸ்.ஆர் மருத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். எப்படி விண்ணப்பிப்பது? வயது வரம்பு எவ்வளவு என்பது பற்றி விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்திய கடற்படையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது கடற்படையில் காலியாக உள்ள (Sailor in Medical Branch) எஸ்.எஸ்.ஆர் மருத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

திருமணம் ஆகாத இளைஞர்கள் மட்டும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.. மத்திய அரசுப்பணி என்பதால் கை நிறைய சம்பளம், வயது வரம்பு உள்ளிட்ட சலுகைகள் இதற்கு உண்டு.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்: எத்தனை பணியிடங்கள் என்ற விவரம் தற்போது வெளியிடப்படவில்லை. தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கும் போது இது பற்றிய விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் ஒன்றை முதன்மையாக வைத்து படித்து இருக்க வேண்டும். மேலும் இதில் குறைந்தபட்சம் 50 சதவிகித தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம்.
வயது வரம்பு & கல்வித்தகுதி: 01.11.2003 - 30.04.2007 க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை எஸ்எஸ்ஆர் மெடிக்கல் அசிஸ்டன்ட் - 2/2024 பேட்ச் பணியில் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை, உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு மூலமாக தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு அறிவிப்பினை படிக்க விண்ணப்பதாரர்கள் இந்த லிங்கை கிளிக் https://www.joinindiannavy.gov.in/ செய்யவும். விண்ணப்ப பதிவு 07.09.2024 அன்று முதல் தான் தொடங்குகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள் - 07.09.2024 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2024 ஆகும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications