மிஸ் பண்ணாதீங்க.. ரயில்வே, தேர்தல் கமிஷன் உள்பட பல இடங்களில் சூப்பர் வேலை.. அழைக்கும் எஸ்எஸ்சி
சென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் மத்திய செயலகம், ரயில்வே, இந்திய தேர்தல் ஆணையம் உள்பட பல இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எஸ்எஸ்சி எனும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் (பணியாளர் தேர்வு ஆணையம்) மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன் விபரம் வருமாறு:
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் கிரேடு சி ஸ்டெனோகிராபர்ஸ் லிமிடெட் டிபார்ட்மென்டல் போட்டி தேர்வு 2018, 2019 நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் மத்திய அரசின் 5 துறைகளில் காலியாக உள்ள 384 ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அதன்படி மத்திய செயலக ஸ்டெனோகிராபர்கள் பணிக்கு 342 பேர், ரயில்வே வாரிய செயலக ஸ்டெனோகிராபர் பணிக்கு 17 பேர், ஆயுதப்படை தலைமையக ஸ்டெனோகிராபர் பணிக்கு 19 பேர், இந்திய தேர்தல் ஆணையம் ஸ்டெனோகிராபர் பணிக்கு 2 பேர், இந்திய வெளியுறவு சேவை பிராஞ்ச் (பி) ஸ்டெனோகிராபர் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 2018 ஆட்சேர்ப்பு ஆண்டின் படி, 01.07.2018ம் தேதியின் அடிப்படையிலும், 2019 ஆட்சேர்ப்பின் படி, 01.07.2019 தேதியின் அடிப்படையிலும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, ,எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரை தளர்வு வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை Regional Director, Staff Selection Commission (Northern Region), Block No.12, C.G.O Complex, Lodhi Road, New Delhi - 110 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் Computer Based Examination, Skill Test மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் கூடுதல் விபரங்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
இந்திய அணுமின் கழகத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. எக்ஸாம் கிடையாது! -
IT JOBS: சென்னையிலேயே ஐடி வேலை ரெடி.. மார்ச் 14ம் தேதியை மறக்காதீங்க... டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ் -
IT JOBS: 11 பிரிவுகளில் ஐடி வேலை.. மார்ச் 14ல் இண்டர்வியூ.. சென்னை - பெங்களூரில் வேலை -
IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ் -
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!












Click it and Unblock the Notifications