ஸ்டேட் பேங்க் கிளார்க் முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது எஸ்பிஐ.. ரிசல்ட்டை பார்ப்பது எப்படி?
டெல்லி: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 8,283 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்காக முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. போட்டித் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்காக முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்நிலையில் அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன.

8,283 கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு: நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் க்ளரிக்கல் கிரேடு நிலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு, முதல் நிலைத் தேர்வு ஜனவரி மாதம் 5,6, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதன்மைத் தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 4ஆம் தேதிகளில் நடைபெற்றன.
குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, லடாக், தமிழ்நாடு,புதுச்சேரி, தெலங்கானா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மிசோரம், திரிபுரா,பீகார், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் இந்த வேலைவாய்ப்பின் மூலம் தகுதியான நபர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எஸ்பிஐ கிளார்க் மெயின் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 27, 2024 அன்று பாரத ஸ்டேட் வங்கியால் (SBI) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. தேர்வில் கலந்துகொண்டு முடிவுகளைப் பார்க்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in க்குச் செல்லலாம்.
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
1. தேர்வர்கள் sbi.co.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
2. அதில் Current Openings என்ற பிரிவை க்ளிக் செய்யவும்.
3. அந்த பக்கத்தில் தோன்றும் "Recruitment Of Junior Associates (Customer Support & Sales)"என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்.
4. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து, உள்ளே செல்லவும்.
5. இப்போது திரையில் தேர்வு முடிவுகள் காட்டப்படும். பதிவு எண்ணை உள்ளிடத் தேவையில்லை.
5. திரையில் தோன்றும் முடிவுகளை சேமித்து வைத்துக் கொள்ளவும்.
தேர்வர்கள் தங்கள் முடிவுகளில் ஏதேனும் முரண்பாடுகளைக் கண்டாலோ அல்லது அவற்றைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
தொடர்புக்கு - 022-22820427 ( 11:00 AM and 05:00 PM வங்கி வேலைநாட்களில்) மின்னஞ்சல் முகவரி - http://cgrs.ibps.in
கூடுதல் தகவல்களுக்கு: https://sbi.co.in/
உள்ளூர் மொழிகளில் பேசும் திறன் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த பிராந்தியங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்மைத் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலில் கலந்துகொண்ட பிறகு, இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications