எல்லை பாதுகாப்பு படையில் "சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் வேலை.." 1,12,000 சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படையில் உதவி சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் என பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படையில் (பிஎஸ்எஃப்) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உதவி சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் ஆகிய பதவிகளில் என மொத்தம் 82 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? எப்படி விண்ணப்பிப்பது என்பது போன்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்:
உதவி சப் இன்ஸ்பெக்டர் - 19 பணியிடங்கள்
சப் இன்ஸ்பெக்டர் - 13 பணியிடங்கள்
ஜூனியர் என்ஜினீயர் / சப் இன்ஸ்பெக்டர் - 9 பணியிடங்கள்
ஹெட் கான்ஸ்டபிள் - 2 பணியிடங்கள்
கான்ஸ்டபிள்ஸ் - 39 பணியிடங்கள் என மொத்தம் 82 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
சம்பளம் எவ்வளவு?:
உதவி சப் இன்ஸ்பெக்டர் - ரூ. 29,200 முதல் ரூ. 92,300 வரை.
சப் இன்ஸ்பெக்டர் - ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரை.
ஜூனியர் என்ஜினீயர் / சப் இன்ஸ்பெக்டர் - ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரை.
ஹெட் கான்ஸ்டபிள் - ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை.
கான்ஸ்டபிள்ஸ் - ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரையும் சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
கல்வித்தகுதியை பொறுத்தவரை உதவி சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு டிப்ளமோ படிப்பு படித்து இருந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு டிப்ளமோ சிவில் என்ஜினீரிங் முடித்து இருக்க வேண்டும். இதேபோல் ஜூனியர் என்ஜினீயர் / சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு டிப்ளமோ எலக்ட்ரிக்கல் என்ஜினீரிங் முடித்து இருக்க வேண்டும். கான்ஸ்டபிள் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10 வகுப்பு + ஐடிஐ படித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பினை பொறுத்தவரை, உதவி சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு அதிகபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஜூனியர் என்ஜினீயர் / சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். கான்ஸ்டபிள் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் பதவிக்கு 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக போலீஸ் ரிப்போர்ட்டர் வேலை.. நேரடி நியமனம்.. +2 தகுதி தான்! செம சான்ஸ்.. உடனே அப்ளை பண்ணுங்க
விண்ணப்பிப்பது எப்படி?:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் பிஎஸ்எப் என்ற அதிகாரப்பூர்வு லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.04.2024 ஆகும்.
தேர்வு முறை எப்படி?:
முதலில் எழுத்து தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வில் தேர்ச்சியடைபவர்களுக்கு டாக்குமெண்ட் வெரிபிகேசன் நடைபெறும். இதன்பிறகு உடல் தரநிலை தேர்வு, பின்னர் உடல் தகுதி தேர்வும் கடைசியில் மருத்துவத்தேர்வு நடைபெறும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications