ரூ.180000 தரும் அரசு.. மீன் வளர்ப்பு மூலம் அசத்தல் வருமானம்.. இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
தேனி: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அலங்கார மீன்கள் வளர்ப்பு தொழிலுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
படித்த இளைஞர்கள் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு வேலைமற்றும் தனியார் வேலைகளை நம்பாமல் சுயதொழில் செய்து முன்னேறுவதற்காக பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளிக்கும் அரசு, அதனை வெற்றிகரமாக முடிப்போருக்கு மானியத்துடன் கடன் உதவி அளித்து முன்னேற வழிவகுக்கிறது. மேலும் நல்ல தொழில் திட்டங்களுடன் வருவோருக்கும் கடன் உதவி அளித்து வழிகாட்டப்படுகிறது. சிறு குறு தொழில் நடத்தவும்,. மீன்வளர்ப்பு உள்பட பல்வேறு தொழில்களுக்கும் மானியத்துடன் கடன் உதவியும் அளிக்கப்படுகிறது.

மீன் வளர்ப்பு தொழிலுக்கான கடன் உதவி அறிவிப்பு குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார். அந்த அறிவிப்பில், " தேனி மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கொல்லைப்புற, புறக்கடை அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் மற்றும் நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் ஆகிய 2 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
கொல்லைப்புற, புறக்கடை அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் பொதுப்பிரிவில் 10- அலகுகள், ஆதிதிராவிடர் பிரிவில் 3- அலகுகள், மகளிர் பிரிவில் 4- அலகுகள் என மொத்தம் 17-அலகுகள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 1- அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3 லட்சம். அதில் 40 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்படும்.
நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் பொதுப்பிரிவில் 3- அலகுகள், ஆதிதிராவிடர் பிரிவில் 1- அலகு, மகளிர் பிரிவில் 1- அலகு என மொத்தம் 5- அலகுகள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 1- அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.8 லட்சம். அதில் 40 சதவீதம் மானியமாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த 2 திட்டங்களில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மற்றும் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் தேனி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வைகை அணையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications