இந்திய கடலோர காவல் படையில் சேர மீனவர்களின் வாரிசுகளுக்கு சூப்பர் வாய்ப்பு.. வெளியான அறிவிப்பு
கன்னியாகுமரி: இந்திய கடலோர காவல் படையில் சேர மீனவர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சியில் சேரலாம் என கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
12-ம் வகுப்பு கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் பயின்று தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50 சதவிதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவிதத்திற்கு மேலும், மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாரிசுகள் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும், சேருவதற்கு ஏதுவாக 90 நாட்கள் வழிகாட்டுதல் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்ப படிவங்களை சம்மந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களில் இருந்தும், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையங்களில் இருந்தும், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், நியாயவிலைக் கடைகள் ஆகிய இடங்களிலிருந்தும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் https://drive.google.com/drive/folders/10LkWukq HyRgbyrerichqzQRhGx6A-wn என்ற இணையதள முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வகுப்புகள் கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கடலோர மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவர். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு பயிற்சிகால ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
எனவே, 12-ம் வகுப்பு கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் பயின்று தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50 சதவிதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவிதத்திற்கு மேலும், மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்ற மீனவர்கள் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல்துறை கூடுதல் இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே, தகுதியான மீனவர்களின் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அலுவலகங்களில் அல்லது கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையங்கள் அல்லது கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்திலும் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications