உச்ச நீதிமன்றத்தில் வேலை.. 90 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் Law Clerk Research Associates Posts பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி என்ன என்பனவற்றை இங்கே பார்க்கலாம்.
உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள சட்ட கிளர்க் - ஆராய்ச்சி இணை பதவி (Law Clerk Research Associates Posts) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 90 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் உள்ளிட்டவற்றை இங்கே விரிவாக பார்க்கலாம்.

கல்வி தகுதி: சட்ட எழுத்தர் பணிக்கு சட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐந்து ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த சட்டப்படிப்பில் இறுதி ஆண்டு அல்லது 3 ஆண்டுகள் கொண்ட சட்ட படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெளிவாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு, சம்பளம்: 18 வயது முதல் 32 வயதுடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை 90 ஆயிரம் வரை வழங்கப்படும். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். அசைன்மெண்ட் காலம் 2024-2025 வரை இருக்கும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு (Part I and Part II) மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் 23 இடங்களில் தேர்வு நடைபெறும். பெங்களூர், போபால், புவனேஷ்வர், சண்டிகார், சென்னை, டேராடூன், டெல்லி, காந்திநகர், கவுகாத்தி, ஹைதராபாத்,இம்பால், ஜோத்பூர், கொல்கத்தா, லக்னோ,மும்பை, நாக்பூர், பாட்னா, புனே, ராய்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், விசாகப்படினம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி? தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். 25.01.2024- 15.02.2024 வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பை படிக்க https://main.sci.gov.in/pdf/recruitment/24012024_113440.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க https://jobapply.in/supremeCourtLawClerk2024/ என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications