உச்ச நீதிமன்றத்தில் வேலை.. 90 பணியிடங்கள்! மாதம் 80 ஆயிரம் சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள சட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளங்கலை சட்டம் படித்தவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணியிடம் குறித்த விரிவான விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
நாட்டின் மிக உயரிய நீதித்துறை அமைப்பாக உச்ச நீதிமன்றம் உள்ளது. டெல்லியில் உள்ள இந்த உச்ச நீதிமன்றத்தில் அலுவல் பணிகளிலும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் தேவைக்கேற்ப அவ்வப்போது உரிய அறிவிப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தி பணியாளர்கள் நியமனம் செய்யபடுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 90 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்காலம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு போன்ற விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: சட்ட எழுத்தர் - ஆராய்ச்சி உதவியாளர் ( Law Clerk – Research Associate)- 90 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து இளங்கலை சட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். பார் கவுன்சிலில் அட்வகேட்டாக பதிவு செய்து இருப்பதும் அவசியம். மூன்று ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் கொண்ட சட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். எனினும் பணிக்கு தேர்வு செய்யபடும் போது தேவையான கல்வி தகுதியை பூர்த்தி செய்து இருக்க வேண்டும். விண்ணப்பதார்களுக்கு எழுத்து திறன், ஆய்வு திறன், கணிணி அறிவு ஆகியவை இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். 2025 - 26 ஆண்டு வரை பணியில் அமர்த்தப்படுவார்கள். ஒப்பந்த காலம் முடிவுக்கு பின் முழு நேர ஊழியருக்கான எந்த உரிமையும் கோர முடியாது.
வயது வரம்பு: 07.02. 2025 தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 20 வயது நிறைவு பெற்றவராகவும் 32 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: இரண்டு கட்ட எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பார்ட் 1-ல் கொள்குறி வகையிலான எழுத்துத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பார்ட் 1, மற்றும் பார்ட் 2 தேர்வு ஒரே நாளில் இருவேளைகளாக நடைபெறும்.
தேர்வு மையங்கள் நாடு முழுவதும் 23 நகரங்ளில் அமைக்கப்படும். சென்னை, பெங்களூர், டெல்லி, கவுகாத்தி, ஐதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், டேராடூன், புனே, மும்பை உள்பட 23 நகரங்களில் தேர்வு நடைபெறும். பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் மொத்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யும். 09.03.2025 அன்று தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.sci.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 14.01.2025 முதல் விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கியது. விண்ணப்பிக்க வரும் 07.02.2025 கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை நன் கு ஒருமுறை படித்து தெரிந்து கொள்வது அவசியம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க; https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2025/01/2025011066.pdf












Click it and Unblock the Notifications