ரெடியா? டைப்பிஸ்ட், அக்கவுண்ட்ஸ் உள்பட 7 பிரிவில் வேலைவாய்ப்பு.. தமிழக விவசாயத்துறையில் நல்ல சான்ஸ்
சென்னை: தமிழ்நாடு விவசாயத்துறையின் மாநில திட்ட கண்காணிப்பு யூனிட்டில் டைப்பிஸ்ட் அக்கவுண்டென்ட் உள்பட 8 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு விவசாயம் மற்றும் உழவர் நலத்துறையின் மாநில திட்ட கண்காணிப்பு யூனிட் சென்னை சேப்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 7 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

* பிசினஸ் அனலிஸ்ட் (Business Analyst) பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எம்பிஏ படிப்பை முடித்து 5 ஆண்டு அனுபவம் கொண்டு 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
* பைனான்சியல் அனலிஸ்ட் (Financial Analyst)பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எம்பிஏ (பைனான்ஸ்) படிப்பை முடித்து Banking Sector-ல் 10 ஆண்டு பணி அனுபவம் கொண்டு 45 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
* Clerical Assistant பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்து 3-5 ஆண்டு அனுபவம் கொண்டு 40 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
* ஹெல்ப் டெஸ்க் ஆபரேட்டர் (Help Desk Operator) பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட உள்னர். டிகிரி முடித்து 2 ஆண்டு அனுபவம் கொண்டு 35 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
* டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டு 35 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
* டைப்பிஸ்ட் (Typist)பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டைப்ரைட்டிங்கில் தமிழ், ஆங்கிலத்தில் ஹையர் முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்துக்கு நிமிடத்துக்கு 40 வார்த்தைகளும், தமிழில் நிமிடத்துக்கு 30 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* அக்கவுண்டன்ட் (Accountant) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எம்.காம் முடித்து 10 ஆண்டு அக்கவுண்ட்டிங்கில் அனுபவம் கொண்டு 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
* ஆபிஸ் அசிஸ்டென்ட் (Office Assistant) பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எஸ்எஸ்எல்சி படித்து 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் நல்ல சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிற. மேலும் இது ஒரு தற்காலிக பணியாகும். இதனால் பணி நியமனம் என்பது ஒப்பந்த அடிப்படையில் தான் செய்யப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தமிழ்நாடு விவசாயம் மற்றம் உழவர் நலத்துறையில் இணையதளம் சென்று விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு மார்ச் மாதம் 30ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை Director of Agriculture, Directorate, IT Section, 4th floor,Wallahja Rd, PWD Estate, Chepauk, Triplicane, Chennai, Tamil Nadu 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை அனுப்பும்போது அந்த கவரின் மேல்புறம் Application for SPMU for the Post எனக்குறிப்பிட்டு விண்ணப்பம் செய்யும் பொறுப்பின் பெயரை எழுத வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி குறித்த அறிவிப்பு, விண்ணப்ப படிவம் டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications