Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்வு இல்லை.. தமிழக மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு.. சென்னையில் தான் பணி.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி காலியாக உள்ள சாகர்மித்ரா பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என சென்னை மாவட்ட மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி சார்பில் சில துறைகளுக்கான ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில் பல துறைகளிலும் அந்தந்த துறை சார்பிலேயே காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எத்தனை?

காலியிடங்கள் எத்தனை?

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் சென்னை மாவட்ட கடலோர மீன்பிடி/ வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள பல்வேறு சாகர் மித்ரா பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இருப்பினும் பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.

 கல்வித் தகுதி என்ன?

கல்வித் தகுதி என்ன?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இளங்கலை பிரிவில் Fisheries Science, Marine Biology, விலங்கியல் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இளங்கலை படிப்பில் வேதியியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, இயற்பியில் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தமிழில் உரையாட தெரிந்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 31.01.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் பணி சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் வருவாய் கிராமங்களில் வசிக்க வேண்டும். அதன்படி இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

 மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?

இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்த காலிப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் மாதம் 3ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கான விண்ணப்பத்தை Office of the Assistant Director of Fisheries and Fishermen Welfare, No.77, S.N. Chetty Street, Royapuram, Chennai-13, Contact No 9384824225/9384824407 என்ற முகவரியில் பெற்று கொண்டு உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து அங்கேயே வழங்க வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபாலில் அதே முகவரிக்கு மார்ச் 5ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+