கோவையில் அரசு வேலை.. ரூ. 62000 சம்பளம்.. 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமே... விண்ணப்பிக்க ரெடியா?
கோவை: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியிடம் உள்ளது. இந்த பதவிக்கு ரூ.62,000 வரை சம்பளம் கிடைக்கும். யாரொல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்.
அரசு வேலையில்சேர வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். பெரிதாக படிக்கவில்லை என்றாலும் அரசு வேலையில் சேர முடியும். உதவியாளர், டிரைவர், கிளார்க், காவலாளி, தோட்டக்கலை பணி, தூய்மை பணியாளர் உள்பட பல்வேறு பணியிடங்கள் தமிழகத்தின் பல்வேறு அரசு அலுலவங்களில் உள்ள. தகுதி உள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதுபோன்ற அறிவிப்புகள் அடிக்கடி மாவட்ட வாரியாக வெளியிடப்படுகின்றன. அதனை பார்த்து விண்ணப்பித்தால் அரசு வேலையில் சேர முடியும். நிலையான ஊதியத்துடன் நிம்மதியாக வாழ முடியும்.

சரி விஷயத்திற்கு வருவோம்.. கோயம்புத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 9.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஊதியம் எவ்வளவு கிடைக்கும்: ரூ.19500 - 62000 (Level-8)என்ற ஊதிய விகிதத்தில் இதர படிகளுடன்.
எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்: டிரைவர் பணிக்கு 01.07.2023 அன்று 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பு (01.07.2023 அன்று உள்ளவாறு ) 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி மற்றும் பிற தகுதிகள் "எட்டாம் வகுப்பு" தோ்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
விண்ணப்பப் படிவம் இப்பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவத்தினை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இனசுழற்சி அடிப்படையில் ஆதிதிராவிடா் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினா் ) இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள் - ஆதரவற்ற விதவை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆணையாளா், ஊராட்சி ஒன்றியம், மதுக்கரை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 09.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்தடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
முழுமையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications