ஒரே வருஷத்தில் வாழ்க்கையே மாறிடும்! ஜெர்மனியில் வேலைவாய்ப்பு.. 2 லட்சம் சம்பளம்! சூப்பர் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளிநாடுகளில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்பாடு செய்து தருகிறது. அந்த வகையில் ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாக செயல்படுகிறது.

போலி முகவர்களை நம்பி வேலை தேடிசென்று யாரும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல உதவுகிறது.
வெளிநாடுகளில் உள்ள சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமே செய்து தருகிறது. அதேபோல் தேவைப்பட்டால் வேலைக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறது. அந்த வகையில், ஜெர்மனி நாட்டில் பணிபுரிய செவிலியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு, விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குட்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு B1,B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் 2 இலட்சம் வழங்கப்படும்.
எனவே. தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025 அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044-22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications