தமிழக அரசு வேலை: மாதம் ரூ.1,30,000 வரை சம்பளம்.. தேதி முடிய போகுது.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி பயிற்சி அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் விரைவில் முடிய உள்ளது. எனவே தகுதியான தேர்வர்கள் மறக்காமல் விண்ணப்பித்து விடுங்கள்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்கிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப துறை ரீதியாக அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலை பணியில் அடங்கிய உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்) மற்றும் தமிழ்நாடு பொது சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.
வயது வரம்பு: உதவி பயிற்சி அலுவலர் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்சி, எஸ்டி, மிகவும் பிற்படுத்தபட்டடோர், சீர்மரபினர், கணவரை இழந்த பெண்களுக்கு வயது உச்ச வரம்பு என்பது கிடையாது.
கல்வி தகுதி என்ன?: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படிக்க தகுதி பெற்றிருக்க வேண்டும்.மேலும், உதவி பயிற்சி அலுவலர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஆங்கிலத்தில் சீனியர் கிரேட் மற்றும் ஷார்ட்ன்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியை பெற்று இருக்க வேண்டும். அதுமடும் இன்றி டிப்ளமோ பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்ல் இருந்து Handloom Technology, Textile Manufacture படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?: உதவி பயிற்சி அலுவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,900 முதல் ரூ.1,31,500/ வரை ஊதியமாக கிடைக்கும். இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.35,400 - ரூ.1,30,400/ ஊதியமாக கிடைக்கும்.
மொத்தம் காலிப்பணியிடங்கள்: உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்) பணிக்கு 2 பேர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 5 பேர் என மொத்தம் 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இருந்ந்தால் திருத்தம் செய்ய ஆகஸ்ட் 21 முதல் 23ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படும்.
தேர்வு எப்போது?: கணினி வழித்தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உதவி பயிற்சி அலுவலர் பணிக்கான கணினி வழித்தேர்வு அக்டோபர் மாதம் 5ம் தேதி காலை(தாள் 1) மற்றும் மதியம்(தாள் 2) நடக்கும். இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு அக்டோபர் 6-ம் தேதி காலையில் தேர்வு நடக்கும்.
தேர்வு அறிவிப்பாணை மற்றும் இதர விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் https://tnpsc.gov.in/Document/tamil/14_2023_Tamil.pdf செய்யவும்.












Click it and Unblock the Notifications