மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?
சென்னை: தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஏப்ரல் மாதத்திற்கான உதவித்தொகை நாளை முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை தவிர மற்ற 2 முக்கியமான திட்டங்களுக்கான தொகை நாளை முதல் வழங்கப்படும்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மூன்று முக்கிய திட்டங்களின் மூலம், பயனாளர்கள் மாதம் ரூ.3000 வரை தங்கள் வங்கிக் கணக்கில் பெறுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரங்களுக்குள் இந்தத் தொகை விடுவிக்கப்படும். ஏப்ரல் மாதத்திற்கான தொகை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. அந்த திட்டங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே காண்போம்.

இந்தத் தொகை, அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியாக பயனாளிகளின் கணக்குகளில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்
மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் மற்றும் புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
சுமார் 4 லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோரும் புதிதாக திட்டத்தில் இணைந்துள்ளனர். ஆனால் அடுத்த மாதம் இந்த தொகை வழங்கப்படாது. ஏனென்றால் கடந்த வாரமே.. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான தொகை சேர்த்து வழங்கப்பட்டுவிட்டது.
இதனால் அடுத்த மாதம் மகளிர் உரிமை தொகை வழங்கப்படாது. இதனால் மற்ற இரண்டு திட்டங்களின் கீழ் ரூ.2000 பல்வேறு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
புதுமைப்பெண் - மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். பயனாளிகள் இளங்கலை படிப்பு படிக்கும் வரை இந்த உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். மாணவிகள் எங்கும் அலைய வேண்டியதில்லை, அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படும். இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
அதேபோல், மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் அடுத்த தவணை இந்த மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் புதல்வன் திட்டம்
அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் கூடுதலாக ரூ.2000 வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் கல்விக்கு அரசு உதவி புரிகிறது.
புதுமைப்பெண் திட்டத்தைப் போலவே, மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்திற்கான அடுத்த தவணை அடுத்த வாரம் வழங்கப்படும். இதன் மூலம் மொத்தம் 3000 ரூபாய் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.
மகளிர் உரிமை தொகை பணம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதால்.. மற்ற 2 திட்டத்திற்கான தொகை அடுத்த வாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின்












Click it and Unblock the Notifications