தேர்வு இல்லை.. சென்னையில் வேலை வேண்டுமா? அழைக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்பது தமிழக அரசின் வீடு கட்டும் திட்டங்கள் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போதைய அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சென்னையில் காலியாக உள்ள மார்க்கெட் பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 25 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் எம்பிஏ (மார்க்கெட்டிங்) படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் பைக் ஓட்ட தெரிந்து இருப்பதோடு, லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். மேலும் மார்க்கெட்டிங் துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும். இதில் ரூ.20 ஆயிரம் சம்பளமாகவும், 5 ஆயிரம் அலோவன்ஸ் தொகையாகவும் வழங்கப்படும்.விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 8ம் தேதிக்குள் Managing Director, Tamil Nadu Housing Board, CMDA Building, E&C market Road, Koyambedu, Chennai - 600 107 என்ற முகவரிக்கு பயோடேட்டோ மற்றும் Attested பெற்ற சான்றிதழ் நகல்களுடன் சென்று விண்ணப்பம் வாங்கி பூர்த்தியிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு தற்காலிக பணி என்பதால் இப்படி தேர்வாகும் நபர்கள் அதிகபட்சமாக 11 மாதங்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications