8 ஆம் வகுப்பு தகுதி போதும்.. 40 ஆயிரம் வரை சம்பளம்.. அறநிலையத்துறையில் வேலை.. விண்ணப்பிக்க ரெடியா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் காலியாக உள்ள 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எந்தெந்த பணியிடங்கள், விண்ணப்பிக்க தகுதி என்ன? போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இங்குள்ள காலிப்பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன. என்னென்ன தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்: அர்ச்சகர், உதவி அர்ச்சகர், நாதஸ்வரம், தவில், மடப்பள்ளி, ஓதுவார், உதவி பரிசாரகர், இரவு காவலர், பகல் காவலர், திருவலகு, மின் பணியாளர், அலுவலக உதவியாளர் என மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும். மின் பணியாளர் பணியிடத்திற்கு ஐடிஐ அல்லது அரசால் அங்கீகரிக்கபட்ட நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருத்தல் அல்லது மின் வாரியத்தால் வழங்கப்பட்ட உரிமம் பெற்றிருத்தல் ஆகியவை இருக்க வேண்டும். அதேபோல், அர்ச்சகர், தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட பணியிடத்திற்கான தகுதி விவரங்களை https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?: தபால் மூலம் மட்டுமே விண்ணபிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் அருள் தரும் முத்தாரம்மன் என்ற பக்கத்தில் கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ' செயல் அலுவலர், அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு 11.08.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தில் கோரப்பட்ட விவரங்களை சமர்பிக்காவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?: அலுவலக உதவியாளர் மற்றும் மின் பணியாளர் பணியிடத்திற்கு ரூ.12,600 முதல் 39,900 வரை சம்பளம் வழங்கப்படும். அதேபோல் நாதஸ்வரம் கலைஞர் பணியிடத்திற்கு 15,300 முதல் 48, 700 வரையும் அர்ச்சகர் பணியிடத்திற்கு 11,600 முதல் 36,800 வரையும் சம்பளமாக கொடுக்கப்படும். சம்பளம் பற்றிய முழு விவரங்களும் அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/38272/1948/document_1.pdf செய்யவும்.
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications