தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1,100 பணியிடங்கள்.. லட்சத்தில் சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழக சுகாதாரத்துறையின் காலியாக உள்ள 1,100 பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் (MRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாதம் ரூ.2 லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்கப்படும் இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையில் அதாவது, சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. மருத்துவர், நர்ஸ் என மருத்துவ பணிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களைப் பொறுத்து உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்பி வருகிறது.

பணியிடங்கள் விவரம்;
* 1,100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon) (பொது) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி
* கல்வி தகுதியைப் பொறுத்தவரை மொத்தம் எம்பிபிஎஸ் முடித்து இருக்க வேண்டும். அது போக, மெட்ராஸ் மெடிக்கல் ரிஜிஸ்ட்ரேஷன் சட்டம் 1914 படி பதிவு செய்யப்பட்ட மருத்துவராக இருக்க வேண்டும். 12 மாதங்களுக்கு குறையாமால் House Surgeon ஆக பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2025 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்சி(ஏ), எஸ்டி, எம்பிசி & டிஎன்சி, பிசி, பிசிஎம், உள்ளிட்ட பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு கிடையாது. மற்றவர்களுக்கு 37 வயது ஆகும்.சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தைப் பொறுத்தவரை பே ஸ்கேல்-22 படி வழங்கப்படும். மாதம் ரூ.56,100 - 2,05,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
கணினி வழியிலான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.1,000- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/எஸ்சிஏ/பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.500 கட்டணமாகும்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.mrb.tn.gov.in/
என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள்: 21.11.2025 ஆகும்.
* விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் நாள்: 11.12.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here












Click it and Unblock the Notifications