தமிழக காவல்துறை எஸ்ஐ பணியிடங்கள் 2023.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? வயது, கல்வி தகுதி முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த மே 5ம் தேதி வெளியானது. வரும் ஜூன் 30ம் தேதிக்குள் பட்டப்படிப்பு படித்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் சேர வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. அதுவம் எஸ்ஐ பணிக்கு சேர வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள்.சட்டம் ஒழுங்கை காக்கும் முக்கிய பொறுப்பு என்பதால் பலரும் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள். அவர்களின் கனவை நினைவாக்க வாய்ப்பு வந்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் 750 காவல் துணை ஆய்வாளர் பதவி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டிஎன்யுஎஸ்ஆர்பி) அதிகாரப்பூர்வமாக அறிவத்துள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் கீழ்கண்ட அறிவிப்பினை பாருங்கள்.

Tamil Nadu Police SI Vacancies 2023 : how to apply? who can eligible , full details

மொத்த எஸ்ஐ காலி பணியிடங்கள்: 750

தாலுகா எஸ்ஐ - 366
SI of Police (AR) - 145
SI of Police (TSP) - 110
Station Officer - 129.

மேலே சொன்ன பணியிடங்களில் 191 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 750 இடங்களில் 123 இடங்கள் காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. காவல்துறையினர் போட்டி தேர்வில் வென்றால் பணி கிடைக்கும்.

கல்வி தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, 3 வருட டிகிரி என்ற அடிப்படையில் படித்திருக்க வேண்டும். அல்லது 10ம் வகுப்பு + 3 டிப்ளமோ+ 2 வருட டிகிரி (அல்லது 3 வருட டிகிரி) என பார்மெட்டில் படித்தவர்கள் தான் விண்ணப்பிக்க முடியும்.

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின் அடிப்படையில் 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு: பிசி, எம்பிசி பிரிவினர் 32 வயதுத வரை விண்ணப்பிக்கலாம்.

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விதவைகள் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

20 சதவீதம் உள்ள டிபார்ட்மெண்ட் (காவல்துறை) கோட்டாவில் 47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினர் 47 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, சிறப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு ரூ.1000 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.6.2023

ஆகஸ்ட் மாதம் எழுத்து தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர்அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் (40%) பெற்றிருக்க வேண்டும்.

20% துறை சார்ந்த விண்ணப்பதாரக்ளை பொறுத்தவரை, ஓபன் கோட்டாவில் விண்ணப்பிப்பவர்களுடன் தமிழ் மொழித் தகுதித் தேர்வு பொதுவாக நடத்தப்படும்.

ஓபன் கோட்டா மற்றும் காவல் துறைசார்ந்த இரு பிரிவுகளின் கீழும் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு பொதுவாக நடத்தப்படும் தமிழ் மொழித் தகுதித் தேர்வை ஒருமுறை எழுத வேண்டும்.

முதன்மை எழுத்துத் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் திறந்தநிலைத் தேர்வர்களுக்கு 25 மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 30 ஆகும். எழுத்து தேர்வு முடிந்த பின்னர் 1:5 என்ற விகிதத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த நிலை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். உள்ளன. அதேபோல், VivaVoce க்கு அழைக்கப்படும் தேர்வின் போது ல் 1:2 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம், தேர்வு தேதி ஆகியவை குறித்து விரைவில் அறிவிக்கப்படும். மேலும் விவரங்கள் அறிய இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+