எக்ஸாம் இல்லை..71 ஆயிரம் ஊதியத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
சென்னை: தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 70 ஈர்ப்பு ஓட்டுநர், 33 பதிவரை எழுத்தர், 151 அலுவலக உதவியாளர், 83 இரவு காவலர் 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆன்லைன் மூலம் செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகியவை அடிப்படை கல்வி தகுதிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் மாவட்ட அளவில் தொடங்கி, யூனியன் அளவில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த துறைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கும் நிலையில் அவற்றை நிரப்ப வேண்டும் என நீண்ட காலமாக அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஏராளமான காலி பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் விண்ணப்பத்தை அளிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை
ஊராட்சி ஒன்றிய அளவில் ஈர்ப்பு ஓட்டுனர், அலுவலக உதவியாளர், பதிவரை எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது, தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் 71 900 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் இந்த பதவிகள் நிரப்பப்படுவதால் https://www.tnrd.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலி பணியிட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு விவரம்
அனைத்து பதவிகளுக்கும் 01.07.2025 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொது பிரிவினர் 32 வரையும், பிசி/எம்பிசி பிரிவினர் 34 வரையும் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயது வரையும் இருக்கலாம். ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு 18 - 32 வரையும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 34 வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 42 வரையும் இருக்கலாம்.
அடிப்படை கல்வித் தகுதி
அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும். பதிவறை எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலர் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். ஈப்பு காவலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
அலுவலக உதவியாளர் பதவிக்கு நிலை 1 கீழ் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவறை எழுத்தர் பதவிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும். இரவு காவலர் பதவிக்கு நிலை 1 கீழ் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும். ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு நிலை 8 கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
மாவட்ட விவரங்கள்
அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கருர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படுகிறது. காலிப்பணியிட விபரங்களை https://tnrd.tn.gov.in/project/recruitment/Advertisement/advertisement_display.php என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
-
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications