அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க
சென்னை: தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தில் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 8 மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.62 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் என்பது தமிழக அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் ஆகும். சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவித்து தொழில் வளாகங்கள் அமைத்தல், வேலை வாய்ப்புகள் உருவாக்குதல், தொழில்முனைவோர்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.

பணியிடங்கள் விவரம்:
இந்த நிறுவனத்தில் ஓட்டுநர் பணிக்கு 4 இடங்களும், அலுவலக உதவியாளர் பணிக்கு 7 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரந்தர பணியிடமாகும். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வித் தகுதி
* ஓட்டுநர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், குறைந்தது 5 வருட அனுபவத்துடன் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம்.
சவுத் இந்தியன் வங்கியில் வேலை.. 50 ஆயிரத்திற்கு மேல் சம்பளம்! எக்ஸாம் கிடையாது.. நாளை தான் கடைசி டேட்
* அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டும் திறன் இருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர்களாகவும் 34 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். SC/ST பிரிவினருக்கு 18-37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
* தேர்ந்தெடுக்கப்படும் ஓட்டுநர்களுக்கு நிலை 8ன் கீழ் மாதம் ரூ.19,500 - 62,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
* அலுவலக உதவியாளர்களுக்கு நிலை 1ன் கீழ் மாதம் ரூ.15,700 - 50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் டான்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tansi.tn.gov.in/ல் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, 31.03.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் தகுதி விவரங்களை கவனமாகப் படிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை,
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சி),
எண். 28, திரு. வி. க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை - 600 032 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப நாள் 01.03.2026 காலை 10.00 மணி ஆகும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 31.03.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்களை, தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மேலும், அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு புதிய தகவல்களை அறிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications