சவுத் இந்தியன் வங்கியில் வேலை.. 50 ஆயிரத்திற்கு மேல் சம்பளம்! எக்ஸாம் கிடையாது.. நாளை தான் கடைசி டேட்
சென்னை: சவுத் இந்தியன் வங்கியில் ஜுனியர் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7 லட்சத்திற்கு மேல் இந்த பணிக்கு சம்பளம் கிடைக்கும். தேர்வு இன்றி நேரடியாக நேர்முகத்தேர்வு அடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும்.
சவுத் இந்தியன் வங்கி என்பது நாட்டில் உள்ள முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாகும். கேரளாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. 1929 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கிக்கு சுமார் 955 கிளைகள் உள்ளன.

பணியிடங்கள் விவரம்:
இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சவுத் இந்தியன் வங்கியில் தற்போது காலியாக உள்ள ஜுனியர் ஆஃபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஜூனியர் ஆஃபிசர்/ பிசினஸ் புரோமஷன் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். வங்கி, நிதி நிறுவனங்கள் உளிட்டவற்றில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவசியம்.
வயதுவரம்பு:
(02.03.2026) தேதிப்படி 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது 01.02.1996-க்கு பிறகு பிறந்தவராக இருக்கக் கூடாது. அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்டும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7.56 லட்சம் சம்பளம் வழங்கப்படும். அதாவது மாதத்திற்கு கிட்டத்தட்ட 60 ஆயிரம் கிடைக்கும்.
தேர்வு முறையை பொறுத்தவரை குரூப் டிஸ்கசன், பெர்சனல் இண்டர்வியூ அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வரும் 02.03.2026 தான் கடைசி நாளாகும். நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here


Click it and Unblock the Notifications
