ZOHO-வில் சூப்பர் வேலை.. ஆங்கிலம் தெரிந்தாலே போதும்! சென்னை, கோவை, நெல்லை உள்பட தமிழகத்திலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் சேல்ஸ் எக்ஸிக்கியூட்டிவ் (Sales Executives) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் மிகவும் முக்கியமான நிறுவனமாக ஜோஹோ உள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளபட பல இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Tamil Nadu ZOHO Recruitment 2024 for Sales Executives

இந்நிலையில் தான் சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு என்பது இப்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடம்: ஜோஹோ நிறுவனத்தில் தற்போது சேல்ஸ் எக்ஸிக்கியூட்டிவ் (Sales Executives) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. சேல்ஸ் எக்ஸிக்கியூட்டிவ் என்றால் வெளியே அலைந்து திரிந்து பணியாற்ற வேண்டும் என எண்ணி விட வேண்டாம். இது Inside Sales Executives பணி என்பதால் அலுவலகத்திலேயே இருந்து தான் வேலை செய்ய வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் நிறையபேர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

கல்வி தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பத்தாரர்கள் எந்த படிப்பை படித்திருந்தாலும் கூட சேல்ஸ் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு தேவையான திறமையை பெற்றிருந்தாலே போதும். அதன்படி விண்ணப்பத்தாரர்கள் ஆங்கிலத்தில் பிழையின்றி பேசுவது மற்றும் சகஜமாக பேசும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக வெளிநாடுகளை சேர்ந்தவர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் உரையாட வேண்டும். இதில் முன்அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் அனைத்து வகையான ஷிப்ட்டுகள் குறிப்பாக இரவு பணி என்றாலும் கூட அதில் பணியாற்ற ஆர்வமாக இருக்க வேண்டும். அதோடு புதிய டெக்னாலஜி சார்ந்த விஷயங்களை படித்து புரிந்து கொண்டு அதுபற்றி விளக்கமாக ஆங்கிலத்தில் எடுத்து கூற வேண்டும்.

பணியமர்த்தப்படும் இடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சென்னை, மதுரை, நெல்லை, சேலம் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் ஜோஹோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் Sales Executives என்பதை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்த்து ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+