தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. பி.இ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) சிறப்பு அதிகாரி (ஐடி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்.சி.ஏ, எம்.இ, எம்டெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள். இது குறித்து விவரங்களை காணலாம்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும். கடந்த 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள். டேட்டா அனலிஸ்ட், சாப்ட்வேர் இன்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
சாப்ட்வேர் இன்ஜினியர் (Software Engineer - Lead API Developer: கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் B.E/B.Tech, அல்லது MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மென்பொருள் மேம்பாட்டில் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் அனுபவமும், அதில் ஐந்து ஆண்டுகள் குழுத் தலைவராகப் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதியானது மாறுபடும். பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்.சி.ஏ, எம்.இ, எம்டெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதி, பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு
(31.12.2025 நிலவரப்படி): IT Infrastructure - Lead Systems/Servers மற்றும் Software Engineer - Lead API Developer பதவிகளுக்கு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Data Scientist, Statistician மற்றும் Data Analyst பதவிகளுக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற அனைத்துப் பதவிகளுக்கும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் (Short Listing) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு நேர்முகத் தேர்வு (நேரில் அல்லது காணொலிக் காட்சி வாயிலாக) நடத்தப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tmbnet.in/tmb_careers/ என்ற ஆன்லைன் இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் முற்றிலும் இலவசம் ஆகும்.
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜனவரி தொடங்கிய நாள் 26.01.2026 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 09.02.2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.ib.tmbonline.bank.in/tmb_careers/doc/Recuritment%20Specialist%20officers%20JAN%202026%20-%20IT.pdf
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications