தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை பார்க்க செம சான்ஸ்! வெறும் டிகிரி போதும்.. விட்றாதீங்க
சென்னை: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேவை அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.48 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றாகவும் விளங்கும் மெர்கன்டைல் வங்கியில் ஏற்படும் கால்பணியிடங்களுக்கு அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் விவரம்: வாடிக்கையாளர் சேவை அதிகாரி சீனியர் - 124 பணியிடங்கள்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருந்தால் போதும். முதல் வகுப்பில் அதாவது 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?: சீனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸியூட்டிவ் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு மாதம் ரூ.48 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பை பொறுத்த வரையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 30 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையம் தமிழ்நாட்டில் சென்னையில் அமைக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் இருக்கும் வின்ண்ப்பதாரர்கள் ஆனலைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.100- கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வங்கியின் இணையதளமான https://www.tmbnet.in/ என்பதில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 28.02.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.03.2025 ஆகும்.
தேர்வு நடைபெறும் தேதி: வரும் ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும். மே 2025-ல் தேர்வு முடிவு வெளியாகும். நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் மே 2025-ல் நடைபெறும். ஜூன்/ ஜூலக்குள் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_SCSE_IBP_II.pdf












Click it and Unblock the Notifications