ஸ்டாலினின் மாஸ் பிளான்.. அரசு ஊழியர்களுக்கு இரவோடு இரவாக இன்ப அதிர்ச்சி.. களமிறக்கப்பட்ட பல கோடி
சென்னை: இடைக்கால பட்ஜெட் 2026ல் நேற்று அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.11,000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. TAPS திட்டத்திற்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு இதன் மூலம் செய்யப்பட்டு உள்ளது.
நேற்று 2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் 17 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 5.11 லட்சம் பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது, இதற்காக ரூ.413 கோடி செலவிடப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டம், இலட்சிய திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது; பேருந்து நிலையம், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள், தொழில்நுட்ப கல்லூரி அமைப்பது என ரூ.6,048 கோடி மதிப்பில் செயல்பட்டு வருகிறது.
தமிழக பட்ஜெட்
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில், 41% பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இரட்டை இலக்க பொருளாதார இலக்கை அடைய பல திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அருங்காட்சியகங்கள் ரூ.285 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளன. சோழர் அருங்காட்சியகம், நொய்யல் அருங்காட்சியகம், எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெண்கல அருங்காட்சியகம், திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் ரூ.287 கோடி மதிப்பில் அமைக்கப்படும். உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழகத்தில் 10,649 புதிய வீடுகள் கட்டித் தரப்படும். இலங்கை தமிழர்களுக்கு ரூ.630 கோடியில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் 10,469 வீடுகள் கட்டுவதற்கு, ரூ.630 கோடி ஒதுக்கப்பட்டு, 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டப்பட்டு வருகின்றன. ஏற்றுமதி பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது, என்று பட்ஜெட்டில் கூறி உள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் TAPS
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காகப் புதிய உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜனவரி 3ம் தேதி அறிவித்தார். இத்திட்டத்தின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி அடிப்படை ஊதியத்தில் 50% உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.
கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான மூவர் ஓய்வூதியக் குழுவின் அறிக்கை அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்குழு, பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை ஆராய்ந்து தமிழ்நாட்டுக்கு ஏற்ற புதிய மாதிரித் திட்டத்தை பரிந்துரைத்திருந்தது.
TAPS திட்டத்தின்கீழ், ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10% ஓய்வூதிய நிதிக்கு செலுத்த வேண்டும். கூடுதல் நிதித் தேவையை மாநில அரசே ஏற்கும். இத்திட்டத்தால், ஓய்வூதிய நிதிக்கு ₹13,000 கோடி கூடுதல் செலவு அரசுக்கு உடனடியாக ஏற்படும்.
TAPS திட்டத்தின்கீழ் புதிய பென்சன்
பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு உண்டு. ஒரு ஓய்வூதியதாரர் மரணமடைந்தால், அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாகப் பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகளுக்குக் கிடைக்கும். ஓய்வு அல்லது பணி மரணத்தின்போது, சேவை காலத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக ₹25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.
தகுதிச் சேவைக்காலம் நிறைவு செய்யாதவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) சேர்ந்து, TAPS அமலுக்கு முன்னர் ஓய்வூதியம் பெறாமல் ஓய்வு பெற்றவர்களுக்கு 'சிறப்பு கருணை ஓய்வூதியம்' உண்டு. மேலும், ஆண்டுதோறும் சுமார் ₹11,000 கோடி அரசு பங்களிக்க வேண்டும், இது ஊழியர்களின் ஊதியத்தைப் பொறுத்து அதிகரிக்கக்கூடும்.
3 விதமான பென்சன் முறையின் ஒப்பீடு:
பழைய ஓய்வூதியம் (OPS) - திட்டத்தின் அம்சங்கள் என்னென்ன?
ஓய்வூதியத் தொகை- கடைசி சம்பளத்தின் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்
ஊழியர் பங்களிப்பு - இல்லை
அகவிலைப்படி (DA) - உண்டு
பணிக்கொடை (Gratuity) - உண்டு
குடும்ப ஓய்வூதியம் - உண்டு
பாதுகாப்பு - அரசின் முழுப் பொறுப்பு
புதிய ஓய்வூதியம் (NPS) - திட்டத்தின் அம்சங்கள் என்னென்ன?
ஓய்வூதியத் தொகை - முதலீடு மற்றும் சந்தை லாபத்தைப் பொறுத்தது
நிரந்தர தொகை - இல்லை
ஊழியர் பங்களிப்பு - ஊழியர் 10% கட்டாயம்
அகவிலைப்படி (DA) - கிடையாது
பணிக்கொடை (Gratuity) - உண்டு
குடும்ப ஓய்வூதியம் - கிடையாது
பாதுகாப்பு - சந்தை அபாயத்திற்கு உட்பட்டது
தமிழ்நாடு அரசின் TAPS திட்டம் - - திட்டத்தின் அம்சங்கள் என்னென்ன?
ஓய்வூதியத் தொகை - கடைசி சம்பளத்தின் 50% ஓய்வூதியம்
ஊழியர் பங்களிப்பு - ஊழியர் 10% அந்த 10% இல் 50% மத்திய அரசு, 50% தமிழ்நாடு அரசு ஏற்கும்
அகவிலைப்படி (DA) - உண்டு, ஆண்டுக்கு இருமுறை
பணிக்கொடை (Gratuity) - உண்டு, ₹25 லட்சம் வரை உயர்வு
குடும்ப ஓய்வூதியம் - உண்டு, 60% வரை
பாதுகாப்பு - அரசின் முழுப் பொறுப்பு
-
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications