பிகாம், பிஏ உள்ளிட்ட டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்.. டிசிஎஸ் ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தற்போது கல்லூரியில் பிகாம், பிஏ, பிஏஎப், பிபிஐ, பிகாம், பிபிஏ, பிஎம்எஸ் படித்து வருவோர் விண்ணப்பம் செய்யலாம். அதாவது 2025ம் ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிகிரி படிப்பை முடிப்பவர்கள் ஜனவரி மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
நம் நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான நிறுவனம் தான் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services). டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனம் நம் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை உள்ளிட்ட பிற இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. டிசிஎஸ்ஸை பொறுத்தவரை தற்போது அடுத்தடுத்து பல்வேறு வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் TCS BPS Hiring for Batch of 2025 Graduates என்ற பெயரில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணிக்கு கலை மற்றும் அறிவியல் பிரிவில் 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதாவது தற்போது இறுதியாண்டு படித்து வருவோர் விண்ணப்பிக்கலாம். பிகாம், பிஏ, பிஎஎஃப், பிபிஐ, பிபிஏ, பிபிஎம், பிஎம்எஸ் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
3 ஆண்டு முறைப்படி கல்லூரி சென்று படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம். Part time மற்றும் Distance Education முறையில் படித்தவர்களுக்கு அனுமதியில்லை. விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு அரியர் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதனை பணிக்கு சேருவதற்கு முன்போ அல்லது கல்லூரி படிப்பை முடிக்கும் முன்போ கிளியர் செய்ய வேண்டும். குறிப்பாக விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 28 வயதுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜனவரி மாதம் 25ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் TCS NextStepPortal சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்யும்போது ஆதார் கார்டில் இருப்பது போல் பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். பிழையின்றி சுயவிபரங்களை பதிவிட வேண்டும். பிழை எதுவும் இருப்பின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதனால் விண்ணப்பதாரர்கள் கவனமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்யும்போது தேர்வு மையத்தை விண்ணப்பதாரர்கள் செலக்ட் செய்ய வேண்டும். தேர்வு மையத்தை பொறுத்தவரை First Come First Serve முறை பின்பற்றப்பட உள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்தால் தான் அருகே உள்ள தேர்வு மையத்தை ‛செலக்ட்' செய்யலாம். தேர்வு என்பது மொத்தம் 50 நிமிடங்கள் வரை இருக்கும். Numerical, Reasoning, Quantitative aptitude வகையில் இருக்கும்.
அதோடு விண்ணப்பதாரர்கள் தங்களின் 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரியில் இதுவரை நடந்த செமஸ்டர் தேர்வுக்கான ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான அப்டேட்டுகள் ‛TCS iON - Our Test Provider' மூலம் வழங்கப்படும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு தேர்வு தேதி பிறகு அறிவிக்கப்படும்.
மேலும் பணம் எதுவும் அலுவலகத்தில் கேட்கப்படாது. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் [email protected] என்ற இணையதளம் அல்லது 18002093111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 24X7 என்ற முறையில் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications