நவம்பர் 16ல் இண்டர்வியூ.. அழைக்கும் TCS ஐடி நிறுவனம்.. சென்னையிலேயே பணி நியமனம்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நவம்பர் 16ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த வகையில் சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா, ஸ்பிரிங்புட், மைக்ரோ சர்வீசஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஜாவா டெவலப்பர் பிரிவில் குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரம் என்பது தெரிவிக்கப்படலாம். பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நவம்பர் 16ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இண்டர்வியூ நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க நினைப்பவர்கள் Tata consultancy Services, Kumaran Naga, 415/21-24,TNHB Main Road, Sholinganallur,Chennai 600119 என்ற முகவரிக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும்.
குறிப்பாக இண்டர்வியூவில் பங்கேற்பவர்கள் அப்டேட்டட் ரெஸ்யூம், அரசு ஐடி கார்ட் (ஒரிஜினல், ஜெராக்ஸ்), ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கொரோனா தடுப்பூசி போட்ட சான்று, EP ரெப்ரன்ஸ் ஐடியுடன் கூடிய டிசிஎஸ் அப்ளிகேஷன் பார்ம், 10, 12, டிகிரி படிப்புக்கான மதிப்பெண் சான்று (அனைத்து செமஸ்டர்), கடைசியாக படித்து முடித்த டிகிரி சான்றிதழ், தற்போது வேலை செய்யும் நிறுவனத்தின் அப்பாயின்மென்ட் கடிதம், கடைசி 3 மாத சம்பளம் ஸ்லிப், இவிஎப்ஓ கார்டு மற்றும் சர்வீஸ் ஸ்டேடட்மென்ட் உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முன்பதிவு செய்து நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications