TCS ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னையில் பணி ரெடியா இருக்கு! அக்டோபர் 25ல் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அக்டோபர் 25ம் தேதி (சனிக்கிழமை) இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்தபணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். யாரெல்லாம் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்? என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு சென்னை உள்பட நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.

tcs-hiring-for-azure-data-engineer-role-in-chennai-and-interview-to-be-held-on-october-25

டிசிஎஸ் சார்பில் 12 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கும் நடவடிக்கை ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும் கூட மறுபுறம் புதிய காலிப்பணியிடங்களுக்கு தேவையான ஆட்சேர்ப்பு நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தான் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Azure Data Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு அசூர் டேட்டா பேக்டரி, அசூர் ஸ்நான்ஸ் அனலிட்டிக்ஸ், அசூர் டேட்டா பிரிக்ஸ் மறஅறம் பிற அசூர் டேட்டா சர்வீசஸ் தெரிந்திருக்க வேண்டும். புரோகிராமிங் லேங்குவேஜ் என்று எடுத்து கொண்டால் பைத்தான், PySpark, SQL for Wranglig processing, query optimization தெரிந்திருக்க வேண்டும்.

டேட்டா வார் ஹவுசிங்கில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.டைமென்ஷனல் மாடலிங், டேட்டா இன்டிகிரேஷன் டெக்னிக்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ரிலேஷனல் ம்றும் நான் ரிலேனல் டேட்டாபேசஸ், பிக் டேட்டா டூல்ஸ்களாக இரக்கும் Hadoop, Kafka உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன், ஆங்கிலத்தில் சரளமாக பேசும், எழுதும் திறன் இருக்க வேண்டும். மேலும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம, திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

இதற்கான இண்டர்வியூ அக்டோபர் 25ம் தேதி காலையில் சென்னை மேக்னம் (Chennai Magnum) அலுவலகத்தில் நடைபெறும். தேர்வாகும் நபர்கள் சென்னை மேக்னம் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+