TCS நிறுவனத்தில் வேலை ரெடி.. ஜுலை 4ம் தேதி இண்டர்வியூ! பெங்களூர் பணி நியமனம்
பெங்களூர்: பெங்களூரில் இயங்கி வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுலை 4ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Azure Devops With Terraform பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 10, பிளஸ் 2 முடித்து 3 ஆண்டு டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அனைத்து படிப்புகளையும் முழுநேரமாக படித்திருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 9 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்எஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் என்றால் குறைந்தபட்சம் 4 ஆண்டு பணி அனுபவமும், பிஎஸ்சி, பிசிஏ முடித்தவர்கள் என்றால் குறைந்தபட்சம் 4.5 ஆண்டுகள் பணி அனுபமும்கொண்டிருக்க வேண்டும்.
குறிப்பாக Terrform பயன்படுத்தி Infrastructure as a Code (laC) அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Docker, Kubernetes மற்றும் கிளவுட் நேட்டிவ் கண்டெய்னர் சர்வீசஸில் அனுபவம் இருக்க வேண்டும். Bash/Shell, Python, PowerShell உள்ளிட்டவற்றில் ஸ்கிரிப்டிங் மற்றும் ஆட்டோமேஷனில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.
AWS கிளவுட்டில் டிரபிள்சூட் மற்றும் பிற பிரச்சனைகளை தீர்க்கும் திறமை இருக்க வேண்டும். AWS nativer சர்வீசஸ் உடன் டேட்டா இன்ஜினியரிங் சர்வீசஸ்களான இஎம்ஆர், அதெனா, க்ளூ உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுலை 4ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவிற்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications