TCS வேலைவாய்ப்பு.. சென்னையில் டிசம்பர் 5ம் தேதி இண்டர்வியூ! சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சென்னையில் டிசம்பர் 5ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் (TCS or Tata Consultancy Services) என்பது நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனத்தில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது தான் சென்னையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் Cloud Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு Azure Databricks, PySpark, Azure Data Factory, Data Lake உள்ளிட்ட டெக்னிக்கல் ஸ்கில்ஸ் உடன் குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதோடு டேட்டா மேனேஜ்மென்ட் மற்றும் பிரின்சிபில்லில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். அசூர் டேட்டா லேக்கை பயன்படுத்தி டிசைனிங், டெலிவரிங் சொல்யூசன்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் இடிஎல்/இஎல்டி/டேட்டா வார்ஹவுஸ் மற்றும் டெல்டா லேக் ஏபிஐ உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இதுதவிர spark core, spark sql, dataframe, driver node, worker node, fault tolerance, collection, executors and task உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய Spark Architecture பற்றிய புரிதல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் (PAN India) நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையிலும் வேலைவாய்ப்பு கிடைக்கலாம். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது டிசம்பர் 5ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது பற்றி தற்போது எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் கீழே உள்ள டிசிஎஸ் லிங்க்ட்இன் பேஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூவின்போது அரசு வழங்கிய ஐடி கார்டு ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications