TCS -யில் ஏராளமான காலியிடங்கள்.. சென்னையிலேயே பணி நியமனம்.. ரெடியா?
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு தேவையான தகுதிகள் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது உலகம் முழுவதும் டிசிஎஸ் நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டாலும் கூட மறுபுறம் புதிதாக பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் டெவலப்பர் - ஜாவா ஸ்பிரிங் புட் (Developer Java Spring Boot) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர்பிஇ, பிடெக், எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்எஸ், பிசிஏ, பிஎஸ்சி உள்பட பிற படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஜாவா 8, ஸ்பிரிங்புட், ரெஸ்ட் மற்றும் சோப் சர்வீசஸ், பேசிக் எஸ்க்யூஎல், மைக்ரோசர்வீசஸ் ஆர்க்கிடெக்ச்சர்,ஸ்பிரிங் செக்யூரிட்டி, Junit, சோனார் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் சிஐ/சிடி டூல்ஸ்களான (Jenkins,GitHub Actions, GitLab CI/CD etc), மெசேஸிங் சிஸ்டம்ஸ் ஜேஎம்எஸ், Kafka, Elastic Search உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. அதன்படி கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக ரெஸ்யூம் அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல் தற்போது பணி செய்யும் நிறுவனம், அதன் சம்பளம், எதிர்பார்க்கும் சம்பளம், நோட்டீஸ் பிரியட் உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications