செப்டம்பரில் தொடங்கும் திமுக மறுசீரமைப்பு.. உச்சப் பதவிக்கு வரும் கனிமொழி.. உதயநிதியும் ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள திமுகவின் முப்பெரும் விழாவிற்கு பின் கட்சியில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று அண்ணா அறிவாலய வட்டாரத்தில் பேச்சுகள் அதிகரித்துள்ளது. இந்த மறுசீரமைப்பில் திமுக எம்பி கனிமொழிக்கு புரோமோஷன் உறுதி என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக தொகுதி வாரியாக குழுக்கள் நியமிக்கப்பட்டு 38 குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் பயணித்து தொண்டர்களின் கருத்துக்களை பெற்றன. அதனை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர். இதனை தொடர்ந்து ஸ்டாலின் இன்னொரு குழுவை தங்கம் தென்னரசு தலைமையில் அமைத்தார்.

Kanimozhi DMK Udhayanithi Stalin

இந்தக் குழுவில் எழிலன் நாகநாதன், கீதா ஜீவன் உள்ளிட்டோரும் இடம்பெற்றனர். இந்தக் குழு திமுகவில் செய்ய வேண்டிய மறுசீரமைப்பிற்கான பரிந்துரைகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பின் ஸ்டாலின் லண்டன் பயணத்தில் இருக்கிறார். லண்டனில் இருந்து வந்தபின், கட்சியின் மறுசீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்தக் குழு ஸ்டாலினிடம் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதன்பின் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா முடிவடைந்த பின் திமுக மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்புகள் வேகம் எடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த மறுசீரமைப்பில் கனிமொழிக்கு புரோமோஷன் உறுதி என்று அண்ணா அறிவாலய வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து வரும் கனிமொழி, பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அண்மையில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனை நேரில் சந்தித்து கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி பெற்றிருந்தார். இதனால் கனிமொழிக்கு புரோமோஷன் கிட்டத்தட்ட உறுதி என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை கட்டாயம் உயர்த்த வேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். சீனியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில தொகுதிகளை பிரித்து இளைஞர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் அண்மை காலமாக கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+