டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை! மார்ச் 22ல் சென்னையில் இண்டர்வியூ + அங்கேயே பணி.. நல்ல சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது மார்ச் 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தேர்வாகும் நபர்களும் சென்னையிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று. Tata Consultancy Services என்ற பெயர் கொண்ட இந்த நிறுவனம் டாடா குழுமத்தை சேர்ந்தது. இந்நிலையில் தான் சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விபரம் வருமாறு:

டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு Angular Developer பிரிவில் பணியாற்றிய அனுபவம் வேண்டும்.
குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை பணி அனுபுவம் கொண்டவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூவுக்கு முன்பாக விண்ணப்பம் செய்வோர் தங்களின் Resume-யை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதில் பணி அனுபவம், இ-மெயில் ஐடி, தற்போதைய கம்பெனியின் பெயர், பணியிடம், செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
அதேபோல் தற்போதைய சம்பவம், எதிர்பார்க்கும் சம்பளம், நோட்டீஸ் பிரியட், இதற்கு முன்பு டிசிஎஸ்/சிஎம்சியில் பணியாற்றிய அனுபவம் உள்ளதா?, இண்டர்வியூவிற்கான Preferred நேரம் (காலை 10 மணி முதல் 4.15 மணி வரை) உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தற்போதைய அறிவிப்பின்படி தற்போது மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். பணிக்கான இண்டர்வியூ என்பது மார்ச் 22ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Tata Consultancy Services Ltd. Siruseri Chennai, Plot No.1/G1, Siruseri Special Economic Zone Sipcot Information Technology Park, NavalurPost, Siruseric, Chenai - 603103 என்ற முகவரியில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications