சென்னையில் ஐடி வேலை.. மறக்காம உடனே விண்ணப்பிங்க! TCS தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
டிசிஎஸ் (TCS or Tata Consultancy Services) என்பது நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனத்தில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது தான் சென்னையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் Full Stack Developers பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அந்த பிரிவில் 4 முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Node.JS, Java Script, React, Angular, Python உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் Node.js, Python உள்ளிட்டவற்றை பயன்படுது்தி சர்வர் - சைட் புரோகிராமிங் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் RESTful APIs, ஃப்ரண்ட் எண்ட் டெக்னாலஜிஸ்களான ஜாவா ஸ்கிரிப்ட, எச்டிஎம்எல், சிஎஸ்ஸ், ரியாக்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் டேட்டாபேஸ் டெக்னாலஜிஸ்களான MySQL அல்லது PostgreSQL உள்ளிட்டவையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் Cloud Platforms-களான AWS அல்லது Azure தெரிந்திருப்பது விண்ணப்பதாரர்களுக்கு பிளஸ் பாயிண்ட்டாகும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது பற்றி தற்போது எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications