TCS ஐடி நிறுவனத்தில் வேலை.. சென்னை உள்பட 2 இடங்களில் நியமனம்.. ஜுன் 21ல் ஆன்லைனில் இண்டர்வியூ
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுன் 21ம் தேதி மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கொல்கத்தாவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்துக்கு சொந்தமானது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனும் ஐடி நிறுவனம். சுருக்கமாக டிசிஎஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னையில் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.

அதேபோல் பெங்களூர், கொல்கத்தா உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் டிசிஎஸ் அலுவலகத்தின் கிளைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வெளியாகி உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வருமாறு:
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது இமேஜிங் இன்ஜினியர் (Imaging Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்து சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 8 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் அவர்களுக்கு எஸ்சிசிஎம், இன்டியூன்/ஆட்டோபைலட், ஆக்டிவ் டைரக்டரி, விண்டோஸ் டிரைவர் மேனேஜ்மென்ட், விண்டோஸ் 10/11 ஓஎஸ் நாலெட்ஸ், குரூப் பாலிசி பவர்செல் உள்ளிட்டவை ஸ்கில்லாக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நியயமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ ஜுன் 21ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை இண்டர்வியூ நடைபெறும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications