TCS ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.. உடனே விண்ணப்பிக்கலாம்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
நம் நாட்டில் செயல்படும் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது.

டிசிஎஸ் சார்பில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது புதிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
டிசிஎஸ் சார்பில் தற்போது ஜாவா டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி, பிஎஸ்சி, எம்டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஜாவா, ஸ்பிரிங், Hibernate, Struts உள்ளிட்டவற்றை ஸ்கில்ஸாக வைத்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் புராஜெக்ட்டில் ஜாவா அடிப்படையில் சொல்யூஷன்ஸ் மற்றும் டெவலப்மென்ட் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் ஜூனியர் டெவலப்பர்ஸ்களின் சந்தேகங்களை தீர்த்து அவர்களின் டெக்னிக்கல் ஸ்கில்ஸை அதிகரிக்க செய்யும் பணியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். குறிப்பாக தங்களுக்கு தேவையான விண்ணப்பங்கள் வந்தவுடன் விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் தாமதமின்றி விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அகமதாபாத்தில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications