TCS-யில் காலியிடங்கள்.. பணி நீக்கத்துக்கு நடுவே சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 5 இடங்களில் வேலை
சென்னை: கடந்த சில நாட்களாக டிசிஎஸ் ஐடி நிறுவம் பெரும் பேசுப்பொருளாகி உள்ளது. நிறுவனத்தில் இருந்து ஏராளமானவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, இந்தூர் உள்ளிட்ட 5 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் டிசிஎஸ். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற இந்த நிறுவனம் நம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தற்போது இந்த நிறுவனம் பேசும் பொருளாகி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் அந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் பணி நீக்க நடவடிக்கை தான். டிசிஎஸ் சார்பில் நிர்வாக காரணங்கள் மற்றும் நிறுவனத்தின் மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இது பேசும் பொருளாகி உள்ளது.
ஐடி ஊழியர்களின் சங்க நிர்வாகிகள் டிசிஎஸ் நிர்வாகம் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இப்படியான சூழலில் தான் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டிசிஎஸ் நிறுவனத்தில் பவர்ஷெல் டெவலப்பர் (PowerShell Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி பவர்ஷெல், சி#, எச்டிஎம்எல் சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட், சிஐ/சிடி, எம்எஸ் எஸ்க்யூஎல் உள்ளிட்டவை நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் JIRA, Bitbucket, Jenkins உள்ளிட்டவையும் அறிந்து வைத்திருந்தால் நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமை, பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கான சம்பளம் குறித்து கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் அனுப்பி வைக்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி தமிழ்நாட்டின் சென்னை, கர்நாடகாவின் பெங்களூர், தெலுங்கானாவின் ஹைதராபாத், மகாராஷ்டிராவின் மும்பை,மத்திய பிரதேசத்தின் இந்தூர் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளன்ர.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications