TCS வேலைவாய்ப்பு.. சென்னை உள்பட 3 இடங்களில் காலியிடங்கள்.. நாளை இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஏப்ரல் 9 ம் தேதி (நாளை) இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட 3 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணி குறித்த அறிவிப்பின் முழு விபரம் வருமாறு:

டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஐடி நிறுவனம் நம் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் உள்ள காலியிடங்கள் அடிக்கடி நிரப்பப்பட்டு வருகின்றன.

it jobs job jobs

இதுதொடர்பான முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது React JS Developer பிரிவில் பணியிடங்கள் என்பது நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சம் 8 ஆண்டு வரை பணியாற்றியவர்கள் விண்ணப்பம் செய்யலாம். கண்டிப்பாக React JS, Redux, HTML5, CSS தெரிந்திருக்க வேண்டும். Git, TDD அனுபவம், SAFe தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும். ஸ்பிரிங்புட், ஜேபிஏ-வை பயன்படுத்தி அப்ளிகேஷன் உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.

Agile environments மற்றும் டெஸ்ட் டிரைவன் டெவலப்மென்ட் மெத்தடலாஜயில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சாப்ட்வேர் டெவலப்மென்ட், ஆட்டோமேஷன் பிரேம்வொர்க்ஸ் டிசைன் பேட்டன்ஸ் கோர்ட் ரிவ்யூ தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிய விபரம் என்பது கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். பணிக்கான இண்டர்வியூ என்பது ஏப்ரல் 9 ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. நாளை இண்டர்வியூ என்பதால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

விண்ணப்பம் செய்யும்பட்சத்தில் இண்டர்வியூ தொடர்பான விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். இதில் தேர்வாகும் நபர்கள் 3 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+