நாளை காலை பெங்களூரில் இண்டர்வியூ.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.. அழைக்கும் TCS

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இயங்கி வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சர்வீஸ் டெஸ்க் ஏஜென்ட் (Service Desk Agent) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு நெட்வொர்க்கிங், ஆக்டிவ் டைரக்டரி, டிஎன்எஸ், உள்ளிட்ட டெக்னிக்கல் மற்றும் சிஸ்டம் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.

tcs-hiring-for-service-desk-agent-on-june-27-in-bengaluru

அதேபோல் போன், ரிமோட் டூல்ஸ், டிக்கெட்டிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றில் கஸ்டமர் சப்போர்ட் பிரிவில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமை ஆகியவை இருக்க வேண்டும். டைம் மேனேஜ்மென்ட், கம்யூனிகேஷன், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் உள்ளிட்டவை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

மல்டி டாஸ்க்கிங் திறமை இருக்க வேண்டும். ஸ்ட்ராங் இன்டர்பர்ஷனல் மற்றும் நெகோஷியேஷன் ஸ்கில் இருக்க வேண்டும். டீமை வழிநடத்த தெரிந்திருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்பதில் ஆர்வம் இருக்க வேண்டும். டீமில் உள்ளவர்களில் திறமையை மேம்படுத்தி பணி வாங்க தெரிந்திருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படலாம்.

இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூன் 27 (நாளை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் நாளை Tata Consultancy Services Ltd, Think Campus 42, 45-p, Hosur Road, Phase 2, Bengaluru - 560 100 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+