டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. டிசம்பர் 20ம் தேதி சென்னையில் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் டிசம்பர் 20ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இதற்கான முழு விவரம் வருமாறு:
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் டிசிஎஸ். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்பதன் சுருக்கம் தான் டிசிஎஸ். இந்த நிறுவனத்தில் தற்போது சர்வீஸ் நவ் டெவலப்பர் (Service Now Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த பணிக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி ஒவ்வொருவருக்கும் சர்வீஸ் நவ் மற்றும் பிளாட்பார்ம் அப்கிரேட்ஸ் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்க தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் ஐடிஎஸ்எம் மாடூல்ஸ்(ITSM Modules) Incident, Proble, Change, Knowledge Management, Service Level Management, Service Catalog உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் சர்வீஸ்நவ் ப்ளோ டிசைனர், வொர்க்புளோ, இன்டிகிரேஷன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி புராசஸ் ஆட்டோமேஷன் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் சர்வீஸ்நவ் ரிப்போர்ட்ஸ், டேஷ்போர்டஸ் உள்ளிட்டவற்றில் பில்ட் செய்யும் திறமை இருக்க வேண்டும். அதேபோல் Service Now CSA + CIS ITSM உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதை அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதற்கான இண்டர்வியூ டிசம்பர் 20ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultacny Serices Ltd, No 415/21-24, Kumaran Nagar, Old mahabalipuram, Sholinganallur, Chennai 600 119 என்ற முகவரிக்கு சென்று பங்கேற்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications