Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TCS layoff.. ரத்தன் டாடா இருந்தால் இப்படி நடந்திருக்காது.. கலங்கும் டிசிஎஸ் ஊழியர்கள்.. என்ன நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் 80,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல், ஐடி ஊழியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த தகவல் டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி ஊழியர்களிடையே பதற்றத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து டிசிஎஸ் உடனடியாக ஒரு விளக்கத்தை அளித்தது, அதில் உண்மையான பணிநீக்கம் சுமார் 12,000 மட்டுமே என்று கூறியது. சுமார் 2% பணியாளர்கள் மட்டுமே நீக்கப்பட்டதாக கூறியது. ஆனால், அந்த வதந்தி மிக ஆழமாகப் பரவிவிட்டது. இதனால் டிசிஎஸ் ஊழியர்கள் கலங்கி போய் இருக்கிறார்கள்.

அதேநேரம் பல ஆண்டுகாலம் பணி செய்தவர்களை எந்த முன்னறிப்புவம் இன்றி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எப்போது யாருக்கு வேலை பறிபோகும் என்ற அச்சத்திலேயே பணியாற்றி வருவதாக ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பணி பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றுவதாக சிலர் குமுறுகிறார்கள். தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும், எச்.ஆர். அதிகாரிகள் நேரடியாக அழைத்தும் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்புவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். நிர்பந்தத்தை ஏற்று சிலர் உடனடியாக ராஜினாமா செய்வதாகவும், மறுப்பவர்களை குறிவைத்து தொல்லை தருவதாகவும் புகார்கள் உள்ளது.

TCS Layoff IT Layoffs jobs

இதனிடையே ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் என்பது டிசிஎஸ் நிறுவனத்தில் மட்டும் நடக்கவில்லை.. உலகெங்கிலும் உள்ள பெரிய ஐடி நிறுவனங்கள் பணியாளர்களை கணிசமாக குறைத்து வருகின்றன. அசன்ஜர், மைக்ரோசாப்ட் மற்றும் பிற ஐடி ஜாம்பவான்களும் பெரிய அளவிலான ஆட்குறைப்புகளை அறிவித்து வருகின்றன. ஏஐயின் பங்களிப்பு அதிகரித்து வருவதால் இந்த மாற்றம் நடந்துள்ளது. திரும்ப திரும்ப ஒரே வேலை செய்து வந்தவர்களில் பலருக்கும் வேலை போயிருக்கிறது. எந்த வேலை எல்லாம் ஏஐ எளிதாக செய்கிறதோ, அந்த வேலையில் உள்ளவர்கள் எல்லாம் நீக்கப்படுகிறார்கள், ஏஐயால் செய்ய முடியாத வேலையில் உள்ளவர்களே பணியில் இருக்க முடியும் என்கிற நிலை ஐடி உலகில் ஏற்பட்டுள்ளது.

டிசிஎஸ் பணிநீக்கக் குழப்பம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், டிசிஎஸ் சுமார் 12,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இந்த முடிவு மறுசீரமைப்பு முயற்சி மற்றும் ஏஐ ஒருங்கிணைப்புடன் தொடர்புடையது என்று டிசிஎஸ் நிறுவனம் கூறியது. அந்த விளக்கத்திற்கு பிறகு, 80,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறும் பதிவுகள் வேகமாக பரவின. பணிநீக்கப்பட்டவர்களுக்கு 18 மாதச் சம்பளம் முதல் எதுவுமே இல்லை என்பது வரை பரவலான பதிவுகள் பரவின. வதந்திகள் மிகமிக அதிகமாக பரவிய நிலையில், விளக்கம் அளித்த டிசிஎஸ், பரவும் தகவல்கள் அனைத்தும் தவறனாவை, மற்றவர்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளதாகவும் குற்றம்சாட்டியது. பணியாளர்களில் 2% மட்டுமே பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் டிசிஎஸ் விளக்கம் அளித்தது.

டிசிஎஸ் விளக்கம்

என்னதான் டிசிஎஸ் விளக்கம் அளித்தாலும், அந்நிறுவன ஊழியர்களிடையே பதற்றமான நிலையே இருக்கிறது. ஐடி ஊழியர்கள் கவலையில் இருக்கிறார்கள். இதனால் உற்பத்தித்திறன் குறைந்திருக்கிறது. அடுத்தது யாருக்கு வேலை போகும் என்று ஊழியர்கள் புலம்புகிறார்களாம். இந்த மன அழுத்தம் மன மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டிலும் வெளிப்படுகிறதாம்.

ஐடி பணிநீக்கங்களில் உலக அளவில் நடப்பது என்ன

டிசிஎஸ் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான பெரிய ஐடி நிறுவனங்கள் மாறிவரும் வணிக முன்னுரிமைகளுக்கு ஏற்ப ஊழியர்களை குறைத்து வருகின்றன. Accenture உலகளவில் 11,000-க்கும் மேற்பட்டவர்களை நீக்கி உள்ளது. அதாவது AI சார்ந்த பணிகளுக்கு மாற முடியாத ஊழியர்களை தூக்கி உள்ளது. எனினும் புதிய வணிக தேவைகள் உள்ள பகுதிகளில் தொடர்ந்து ஆட்களை நியமிப்பதாக Accenture நிறுவனம் கூறியிருக்கிறது.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டு சுமார் 9,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்தது. இந்த பணிநீக்கம் என்பது ஜூலையில் தான் பெரிய அளவில் நடந்தது. AI மற்றும் ஆட்டோமேஷனில் அதிக முதலீடு செய்த போதிலும், இந்த பணிநீக்கங்கள் அவசியம் என்றும் கூறியது.

பொதுவாக ஆட்டோமேஷன்,ஏஐ மற்றும் வளர்ந்து வரும் வணிகத் தேவைகளுக்கு ஏற்பவே ஐடி நிறுவனங்களில் வேலைகளின் தேவைகள் மாறி வருகின்றன. இதனால் உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் இருக்கிறார்கள்.

பணிநீக்கங்களின் தாக்கம்

பணிநீக்கங்கள் என்பது வெறும் எண்ணிக்கையாக மட்டும் கடந்து செல்ல முடியாது. இந்த செயல்களால் மீதமுள்ள ஊழியர்கள் பெரும்பாலும் நிச்சயமற்ற தன்மையின் அழுத்தத்தை உணர்வதை காண முடிகிறது. மன அழுத்தம் இவர்களுக்கு அதிகமாகிறது. பணி திறனும் குறைகிறது. வழக்கமான வேலைகள் கூட அதிக பாரமாகத் தோன்றுவதாக கூறப்படுகிறது. கிரியேட்டிவ் ஆக யோசிப்பதும் குறைகிறது. முடிவுகள் எடுக்க அதிக நேரம் ஆகிறதாம். நிறுவனத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறதாம்.

கவலையில் ஊழியர்கள்

இந்த பிரச்சனை ஆபீஸை தாண்டி வீடுகள் வரை செல்கிறது. வேலையில் இருந்து நீக்கப்படும் குடும்பங்கள் நிதி அழுத்தத்தை சந்திக்கின்றன. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே கவலைகளை வெளிப்படுத்தி புலம்புகிறார்கள். தங்கள் வேலைகளைத் தக்கவைத்துக் கொண்ட ஊழியர்கள் கூட பரவும் வதந்திகளால், அடுத்து என்ன நடக்குமோ என்ற தொடர்ச்சியான கவலையில் இருக்கிறார்கள். வேலை செய்யும் இடத்திலும் சரி, வீட்டிலும் சரி மகிழ்ச்சியான உரையாடல்களே ஊழியர்களிடம் இல்லை.. அவர்கள் வேலை பறிபோகுமா என்ற அச்சத்திலேயே இருக்கிறார்களாம்.

13 ஆண்டு வேலை

இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர், தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில் " எங்கள் நிறுவனத்திற்காக 13 ஆண்டு காலம் வேலை செய்துள்ளேன். ஐந்து மாதங்களாக டிசிஎஸ் நிறுவன HR பிரிவு அதிகாரிகள் என்னை டார்ச்சர் செய்தார்கள். டார்கெட் செய்து நெருக்கடி கொடுத்து வேலையில் இருந்து ராஜினாமா செய்ய நிர்ப்பந்தம் செய்தார்கள். திடீரென ஒருநாள் உங்களை வேலையை விட்டு நீக்கிவிட்டோம் என கூறினர். 10 ஆண்டுகளுக்கு மேலாக விஸ்வாசமாக வேலை செய்த என்னை டிசிஎஸ் நிறுவனம் ஏமாற்றியுள்ளது.

கிராஜுவிட்டி பணம்

வேண்டுமென்றே தேவையில்லாத காரணங்களை சுட்டிக்காட்டி என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். பெஞ்ச் எனப்படும் எந்த ப்ராஜெக்டிலும் இல்லாமல் இருந்த காலகட்டத்திற்கு ரெக்கவரி கட்டணமாக 7 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என டிசிஎஸ் நிறுவனம் நிர்பந்தம் செய்தது. அந்த தொகையை என்னுடைய கிராஜுவிட்டி பணத்தில் இருந்து பிடித்தம் செய்து கொண்டார்கள். குறிவைக்கப்பட்ட காலத்தில் அலுவலகத்தில் இருந்த ஒவ்வொரு நாளையும் நரகத்தில் இருப்பதைப் போல இருந்தது.

ரத்தன் டாடா இருந்திருந்தால்

தற்போது புனேவில் நண்பர்களின் வீட்டில் தங்கியிருந்தபடி வேறு இடத்தில் வேலை செய்து வருகிறேன். சொந்த ஊரில் இருக்கும் என்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரியாது. அவர்களிடம் எனக்கு வேலை போன விஷயத்தை கூறும் தைரியம் இல்லை" என்று கலங்கியபடி கூறினார். அதேநேரம் டிசிஎஸ் ஊழியர்கள் பலருக்கும் உள்ள கவலை என்னவென்றால், ரத்தன் டாடா உயிருடன் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது என்பது தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+