For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூப்பர் நியூஸ்! ஆசிரியர் தகுதி தேர்வு கடைசி தேதி நீட்டிப்பு.. கடைசி தேதி எப்போது தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உடன் நிறைவடைந்தது.

Teacher eligibility test TET deadline extended til April 26

இதில் சுமார் 4.50 லட்சம் பேர் விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கடைசி நேரத்தில் ஒரே கட்டத்தில் பலர் விண்ணப்பிக்க முயன்றதால் சர்வர் முடங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பலருக்கு ஒடிபி பெறுவதில் சிக்கல் இருந்ததாகவும் இதனால் பலரால் உரியக் காலத்தில் விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னையில் யுகேஜி மாணவனை அடித்த ஆசிரியர்கள் 3 பேர் கைது சென்னையில் யுகேஜி மாணவனை அடித்த ஆசிரியர்கள் 3 பேர் கைது

இதன் காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரும் ஏப்ரல் 26 வரை கால அவகாசத்தை நீட்டித்து உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

English summary
Last date of Teacher eligibility test: (ஆசிரியர் தகுதி தேதி கடைசி தேதி நீட்டிப்பு) Tamilnadu Teacher eligibility test latest updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X