சென்னை பள்ளியில் ஆசிரியர் வேலை.. நோ எக்ஸாம்.. மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க?
சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் கப்பல் துறை கல்வி அறக்கட்டளையின் கீழ் சென்னை தண்டையார்பேட்டையில் பள்ளிக் கூடம் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் காலியாக உள்ள 6 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாக சென்னை துறைமுகம் செயல்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பல் தூறை கல்வி அறக்கட்டளையின் கீழ் சென்னை தண்டையார் பேட்டையில் பள்ளிக் கூடம் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிரப்பப்படும் பணியிடங்கள், கல்வி தகுதி, சம்பள விவரம் உள்ளிட்டவற்றை கீழ் விரிவாக பார்க்கலாம்.

கல்வி தகுதி என்ன?: மழலையர் பள்ளி ஆசிரியர் (Kindergarten Teacher) பணியிடத்திற்கு பட்ட படிப்புடன் Montessori பயிற்சி முடித்து இருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.எட் முடித்து இருக்க வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு எம்.காம் பட்டப்படிப்புடன் பி.எட் படித்து இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் 64-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ண படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சென்னை துறைமுக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பிறகு நேர்முகத்தேர்வு அழைப்பு விடுக்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதரார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு எதுவும் கிடையாது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மேல் நேர்முகத்தேர்வு நடைபெறும்
சம்பளம் எவ்வளவு?: இது முழுக்க முழுக்க ஒபந்த பணியாகும். 2 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். இடைநிலை ஆசிரியருக்கு ரூ.20 ஆயிரமும், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ. 25 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்படுகின்றன. மழலையர் பள்ளி ஆசிரியர் (3 பணியிடங்கள்), இடைநிலை கிரேட் ஆசிரியர் (SGT) - 2 பணியிடங்கள், முதுநிலைபட்டதாரி ஆசிரியர் (PGT) - 1 பணியிடம் என மொத்தம் ஆறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
நேர்காணல் நடைபெறும் இடம் பதிவு செய்வது எப்படி உள்ளிட்ட விவரங்கள் சென்னை துறைமுக கழகத்தின் இணையதளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை தெரிந்து கொள்ள https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/chpaschool28723.pdf இந்த இணைய தள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications