நீலகிரி வெல்லிங்டன் ராணுவ பள்ளியில் வேலை வாய்ப்பு.. பிஎட், எம்எட் முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்
சென்னை: நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் அமைந்துள்ள ஆர்மி பப்ளிக் ஸ்கூலில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT), பட்டதாரி ஆசிரியர் (TGT), தொடக்கப்பள்ளி ஆசிரியர் (PRT) மற்றும் மழலையர் பள்ளி ஆசிரியர் (KGT) என மொத்தம் 29 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன்னில் ராணுவத்திற்கு சொந்தமான பள்ளி உள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த பள்ளியில் காலியாக உள்ள 29 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிட விவரங்கள்:
* முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) பிரிவில் கணிதம், வரலாறு, உளவியல், உடற்கல்வி ஆகிய பாடங்கள்.
* பட்டதாரி ஆசிரியர் (TGT) பிரிவில் இந்தி, அறிவியல், சமஸ்கிருதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்கள்.
* தொடக்கப்பள்ளி ஆசிரியர் (PRT) பிரிவில் PAT ஆக்டிவிட்டி, நடனம், கணினி அறிவியல், கலை மற்றும் கைவினை பாடங்கள்.
* மழலையர் பள்ளி ஆசிரியர் (KGT) பிரிவிற்கும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி:
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT): தொடர்புடைய பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி அவசியம். இதில் NCERT ஒருங்கிணைந்த M.A./M.Sc. அல்லது B.Ed./M.Ed. (மூன்றாண்டு) படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
PGT (உடற்கல்வி): குறைந்தது 50% மதிப்பெண்களுடன் உடற்கல்வியை விருப்பப் பாடமாக எடுத்து இளங்கலைப் பட்டம். மேலும், NCTE அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ஒரு வருட B.P.Ed அல்லது இரண்டு வருட M.A.Ed. பட்டம் நிறைவு செய்திருக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் (TGT): தொடர்புடைய பாடங்களில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளங்கலை/முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதி. இதில் NCERT ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு (4 ஆண்டுகள்) அல்லது B.Ed./M.Ed. (3 ஆண்டுகள்) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பாடங்களுக்கான தகுதிகளை முழுமையான அறிவிப்பைப் பார்க்கவும்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் (PRT): குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம். B.EI.Ed / 2 வருட D.EI.Ed படிப்புகளுக்கு முன்னுரிமை உண்டு. PAT, நடனம், கணினி அறிவியல், கலை மற்றும் கைவினை பிரிவுகளுக்கு B.P.Ed, D.P.Ed, BCA, B.E/B.Tech (CS/IT) அல்லது கலைப் பட்டப்படிப்பு போன்ற சிறப்புத் தகுதிகள் தேவை.
மழலையர் பள்ளி ஆசிரியர் (KGT): நர்சரி ஆசிரியர் கல்வி / முன்பள்ளிக் கல்வி / குழந்தைமைக் கல்வித் திட்டத்தில் (D.E.E.Ed) குறைந்தபட்சம் இரண்டு வருட டிப்ளமோ. அல்லது NCTE அங்கீகரிக்கப்பட்ட B.Ed (நர்சரி), NTT / மாண்டசெரி பயிற்சி அல்லது ECCE தகுதிகள் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
வயது வரம்பினை பொறுத்தவரை 2026 மே 8 நிலவரப்படி கணக்கில் கொள்ளப்படும். புதிய விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு 40. அனுபவம் வாய்ந்தவர்களுக்கு 40 முதல் 55 வயது வரை. கடந்த 10 ஆண்டுகளில் 5 வருட பணி அனுபவம் கட்டாயம். AWES OST தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்கள் பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.apswellington-nilgiris.edu.in/ இல் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
"ARMY PUBLIC SCHOOL WELLINGTON" என்ற பெயரில் ரூ. 250/- (ரூபாய் இருநூற்று ஐம்பது மட்டும்) க்கான டிமாண்ட் டிராப்டை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பை முழுமையாகப் படித்து, தங்கள் தகுதிகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது முழுக்க தற்காலிக பணிகள் அடிப்படையிலானது ஆகும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
ஒவ்வொரு பிரிவுக்கும் (PGT/TGT/PRT/KGT) தனித்தனி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, சுய சான்றளிக்கப்பட்ட ஆவண நகல்களுடன்,
"Principal, Army Public School Wellington,
Tdk Pillai Rd,
Near Defence Services Staff College,
Wellington,
Tamil Nadu 643231"
என்ற முகவரிக்கு அஞ்சல் அல்லது நேரடியாக வரும் 8 ஆம் தேதி மாலை 3:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.apswellington-nilgiris.edu.in/storage/career/ynrUBL5YZQMxQt99070OzJ1YssE1VmTVl8WfOLst.pdf














Click it and Unblock the Notifications