‛‛Freshers’’ வேலைவாய்ப்பு.. மஹிந்திரா குரூப்பின் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: மஹிந்திரா குரூப்பின் சார்பில் பிரபல ஐடி நிறுவனமாக செயல்பட்டு வரும் டெக் மஹிந்திராவில் Freshers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் உள்ள பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்று டெக் மஹிந்திரா (Tech Mahindra). மஹிந்திரா குரூப்பை சேர்ந்த இந்த நிறுவனம் மகாராஷ்டிராவில் புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதுதவிர பெங்களூர் உள்பட மேலும் சில இடங்களிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
‛‛சாப்ட்வேர் இன்ஜினியர் பணி''.. டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவரா நீங்கள்? அழைக்கும் பிரபல நிறுவனம்
தற்போதைய அறிவிப்பின்படி டெக் மஹிந்திரா நிறுவனத்தில் Fresher Recruitment Drive மூலம் ப்ரசர்ஸ் (Freshers) பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதன்மூலம் 2024ம் ஆண்டு படிப்பை முடித்தவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி 10, பிளஸ் 2 படிப்பை முடித்து இன்ஜினியரிங் அல்லது எம்சிஏ அல்லது எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை 70 சதவீதம் மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இன்ஜினியரிங் பிரிவு என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன், டெலிகாம், கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், சைபர் செக்யூரிட்டி படிப்பை முடித்திருக்க வேண்டும். எம்இ, எம்டெக் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது. கல்லூரி படிப்பின் மதிப்பெண்கள் சதவீதத்தில் குறிப்பிட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Tech Mahindra இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் டெஸ்ட், இன்டர்வியூ உள்ளிட்டவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்யும்போது ID மற்றும் PIN ஆகியவை ரிஜிஸ்ட்டர்டு இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை பயன்படுத்தி தான் ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் எந்த இடத்தில் உள்ள அலுவலகத்தில் வேண்டுமானாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். பிற நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து என்ஓசி சான்றிதழ் பெற வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு கண்டிஷன் உள்ளது. அதாவது டெக் மஹிந்திரா பணிக்கு கடந்த 6 மாதத்துக்குள் விண்ணப்பம் செய்தவர்களால் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications